
டாக்டராக இருந்த பவர் ஸ்டார் சீனிவாசன் சினிமா மோகத்தில் தனக்கு சினிமாவுக்கான வயது இல்லை என்றும் தெரிந்தும் ஹீரோவாக நடிக்கவந்து படங்களை தயாரித்து நடித்தவர் அது மட்டும் இல்லாமல் தன் படங்களை யாரும் பார்க்க வரமாட்டார்கள் என்று தெரிந்து இருந்தும் நடித்தவர் . பின்னர் சந்தானத்தால் தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் ஆனார். இவர் நடிகர் டாக்டர் என்று நாம் நினைத்தால் பிரபல டுபாக்கூர் என்று அடிக்கடி செக் மோசடி அது இது என்று ஜெயிலுக்கு பொய் விட்டு வருவார் அப்படி தான் இப்பவும் ஜெயிலுக்கு போகிறார் என்று பார்க்கலாம் .
பணமோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் கோடிக்கணக்கில் பணம் வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் கமிஷன் வாங்கிக்கொண்டு, ஏமாற்றிவிட்டார் என்று சென்னை போலீசாரால் கடந்த 2013-ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு, பின்னர் வெளியே வந்தார்.
இதேபோல், ஆந்திர தொழிலதிபர் ஒருவரும் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பணமோசடி புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அந்த வழக்கின் அடிப்படையிலும் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து நிறைய பேர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது அடுக்கடுக்கான புகார்கள் கொடுத்த வண்ணம் இருந்தனர்.
அவர்கள் வரிசையில் புளுகோஸ் கட்டமைப்பு நிறுவனம் நடத்தி வந்த திலீப் பத்வானியிடமும் ரூ.1000 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி, அவரிடம் கமிஷனாக ரூ.5 கோடியை வாங்கிய பவர் ஸ்டார் சீனிவாசன், வழக்கம்போல் அவரையும் ஏமாற்றிவிட்டதாக டெல்லி போலீசாரிடம் கடந்த 2013-ஆம் ஆண்டு திலீப் புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், அப்போதே டெல்லி போலீசார் சென்னை வந்து பவர் ஸ்டார் சீனிவாசனை விசாரணைக்காக டெல்லி அழைத்து சென்றனர். அதன்பிறகு, அந்த புகார் மீதான நடவடிக்கை குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. பவர் ஸ்டார் சீனிவாசனும் சிறையில் இருந்து வெளியே வந்து படபிடிப்புகளில் கலந்துகொண்டு நடித்து வந்தார்.
இந்நிலையில், இன்று பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் சென்னையில் திடீரென கைது செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பண மோசடி வழக்கிலேயே பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைதுசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. யார் கொடுத்த புகாரின் பேரில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.
