Saturday, March 25
Shadow

மீண்டும் புதிய சாதனை படைக்க தயாராகும் பிரபாஸ்

ஒவ்வொரு முறையும் அனைவரையும் திகைக்க வைக்கும் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் பிரபாஸ் என்பது அனைவரும் தெரிந்த விஷயம் தான்.

இவரால் காதலன் கேரக்டரில் இருந்து கிளர்சியாளராக மாறும் கேரக்டரிலும்  நடிப்பாரா? என்ற கேள்விக்கு , பதில் ஆம் என்று வருகிறது. இது போன்ற போன்ற கேரக்டரில் அவர் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இதே போன்ற கதையம்சம் கொண்ட படமான  ரிபெல் என்று பெயரிடப்பட்ட படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் கடந்த 2012-ஆம் ஆண்டில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகியது. இந்த படத்தின் அதிரடி காட்சிகள், சிறப்பாக அமைந்ததுடன், வசூலிலும்  புதிய மைல் கல்லை உருவாக்கியது.

இந்த படத்தின் சண்டை காட்சிகள்  முற்றிலும் மாறுபட்டதாக அமைக்கப்பட்டடிருந்தது.  இதில் இடம் பெற்றிருந்த உதைகள், குத்துக்கள், கோபம் மற்றும் இரத்தம் ஆகியவை பிரபாஸின் சிறந்த அதிரடி  ஆக்ஷனை வெளிப்படுத்தும் காட்சியாக அமைந்தது.  மேலும் 100 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து சாதனை படைத்தது. இந்தியா முழுவதும் டிவியில் மிக உயர்ந்ததாக படமாகவும்  மதிப்பிடப்பட்டது.

பிரபாஸின்  ஜிம் பாடி, உயரம் போன்றவை அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவை நிலை நிறுத்தியுள்ளது.  மேலும்  இவர் திரையில் நம்பிக்கைக்குரிய நடிப்பைக் கொடுக்கும் நடிகராக இருப்பதுடன், ஒவ்வொரு இயக்குனரின் முதல் தேர்வாகவும் திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில்,  அதிரடி ஆக்‌ஷன், ரொமானஸ் மற்றும், அதிக ஆக்‌ஷன் கொண்ட படங்களில் நடிக்க தயாராகி விட்டார். தற்போது பிரபாஸ் தனது 20-வது படத்திற்கு தயாராகி வருவதால்,  நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்த படம் இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது.