
‘பிரேமலு’ எழுத்தாளரின் அடுத்த பயணம்… இயக்குநராக களம் இறங்கும் கிரண் ஜோசி!
சந்தீப் பிரதீப் – இந்திரஜித் சுகுமாரன் – திலீஷ் போத்தன் கூட்டணியில் உருவாகும் ‘பிக்னிக்’ | 2027 ஜனவரி 14 அன்று திரையரங்குகளில்
‘பிரேமலு’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் பாவனா ஸ்டுடியோஸ், தனது அடுத்த படைப்பாக ‘பிக்னிக்’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. பெயருக்கு ஏற்றவாறு குடும்பத்தையும், நகைச்சுவையையும், உணர்வுகளையும் இணைக்கும் கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது.
இந்தப் படத்தின் மூலம் எழுத்தாளராக இருந்து இயக்குநராக புதிய பொறுப்பை ஏற்கிறார் கிரண் ஜோசி. ‘பிரேமலு’ மற்றும் சமீபத்திய வெற்றிப் படமான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகியவற்றில் இணை எழுத்தாளராகப் பணியாற்றிய இவர், தனது முதல் படத்தை இயக்குகிறார்.
முந்தைய படங்களின் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ள கிரண் ஜோசி, நகைச்சுவையுடன் இயல்பான குடும்ப உறவுகளையும், அந்தச் சூழலில் உருவாகும் சுவாரஸ்யமான சம்பவங்களையும் கதையாகக் கையாளும் பாணியைக் கொண்டவர். குறிப்பாக கேரளத்தைத் தாண்டி தெலுங்கு பேசும் மாநிலங்களிலும் இவரது முந்தைய படங்களுக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால், இயக்குநராக அவர் எப்படிப்பட்ட திரைப்படத்தை உருவாக்கப் போகிறார் என்பதும் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஒரே படத்தில் இணையும் கவனம் ஈர்க்கும் கூட்டணி
‘பிக்னிக்’ படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தில் சந்தீப் பிரதீப் நடிக்கிறார். அவருடன் நடிகர் இந்திரஜித் சுகுமாரன் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குநரும் நடிகருமான திலீஷ் போத்தன் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
மேலும் சுஜினா ஸ்ரீதரன் மற்றும் அக்ஷதா அஜித் ஆகியோரும் படத்தில் நடிக்கின்றனர்.
குடும்பப் பின்னணியில் நடைபெறும் நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியீடு
மலையாளத்தைத் தாண்டி பாவனா ஸ்டுடியோஸ் படங்களுக்கு தென்னிந்திய அளவில் கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, ‘பிக்னிக்’ திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
மேலும், தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட தெலுங்கு பேசும் மாநிலங்களில் படத்தை வலுவாகக் கொண்டு செல்லும் வகையில் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் (Future Runup Films) நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் ரிலீஸை குறிவைக்கும் ‘பிக்னிக்’
குடும்ப ரசிகர்களை மையமாகக் கொண்ட முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் ‘பிக்னிக்’, 2027 ஜனவரி 14, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிப்பு: சந்தீப் பிரதீப், திலீஷ் போத்தன், இந்திரஜித் சுகுமாரன், சுஜினா ஸ்ரீதரன், அக்ஷதா அஜித்
எழுத்து & இயக்கம்: கிரண் ஜோசி
இசை: கோவிந்த் வசந்தா
தயாரிப்பு: பாவனா ஸ்டுடியோஸ்
படத்தின் கதைக்களம், தொழில்நுட்பக் குழு உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் அடுத்தடுத்த அறிவிப்புகளில் வெளியாகும்.

‘Premalu’ Co-Writer Kiran Josey Turns Director with Bhavana Studios’ ‘Picnic’
Sandeep Pradeep, Indrajith Sukumaran and Dileesh Pothan headline the family comedy drama, set for a January 14, 2027 release
Bhavana Studios, the production house behind films such as Premalu and Bethlehem Kudumba Unit, has announced its next project, Picnic. The upcoming film brings together a promising cast and marks the directorial debut of writer Kiran Josey, who previously worked as a co-writer on both films.
Set against a family backdrop, Picnic is said to blend comedy and emotion while focusing on the dynamics and situations that emerge within a family. The film is positioned as an entertaining family drama aimed at audiences across age groups.
Kiran Josey makes the move from writing to direction
Kiran Josey has already made his presence felt as a writer with Premalu and Bethlehem Kudumba Unit. With Picnic, he takes charge of the entire filmmaking process as director for the first time.
Both of his previous writing projects found audiences beyond Kerala, including in the Telugu-speaking states. His transition to direction has therefore added interest to the project, particularly among audiences familiar with his earlier work.
A promising ensemble
The film features Sandeep Pradeep in the lead, with Indrajith Sukumaran and National Award-winning filmmaker and actor Dileesh Pothan also part of the cast.
Sujina Sreedharan and Akshatha Ajith are also set to appear in the film.
The music for Picnic will be composed by Govind Vasantha, who is known for his work across South Indian cinema.
Four-language release planned
In line with Bhavana Studios’ growing reach across South India, Picnic is set to release simultaneously in Malayalam, Tamil, Telugu and Kannada.
The makers have also partnered with Future Runup Films for the film’s theatrical release in the Telugu-speaking states, with plans for a strong release across Andhra Pradesh and Telangana.
A festive theatrical release
Picnic is scheduled to arrive in cinemas worldwide on January 14, 2027, during the festive season.
With Kiran Josey making his directorial debut and a cast that brings together Sandeep Pradeep, Indrajith Sukumaran and Dileesh Pothan, the film marks the next chapter for Bhavana Studios following the success of its recent projects.
Cast: Sandeep Pradeep, Dileesh Pothan, Indrajith Sukumaran, Sujina Sreedharan, Akshatha Ajith
Written & Directed by: Kiran Josey
Music: Govind Vasantha
Produced by: Bhavana Studios
More details about the film are expected to be announced soon.
