Sunday, June 21
Shadow

இந்தியன் 2-வில் இணைந்த பிரபல நடிகைகள்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. ஆனால் தொடங்கிய வேகத்திலேயே படப்பிடிப்பு நின்றுபோனது. கமல் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததால் படப்பிடிப்பு தாமதமாகிறது என்று கூறப்பட்டது.

தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பிலிருந்து பின்வாங்குவதாகவும் ஷங்கர் வேறு தயாரிப்பாளர்களை அணுகிவருவதாகவும் திரைத்துறையில் பேசப்பட்டது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் தொடங்க உள்ளது. முதல் பாகத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, ஊர்மிளா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் காஜல் அகர்வால் நடிப்பது ஏற்கனவே உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், கனா, வடசென்னை, காக்கா முட்டை, ஹவுஸ் ஓனர், திருடன் போலீஸ், அட்டகத்தி, ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேசும், மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், மேயாதா மான் படத்தில் நடித்துள்ள பிரியா பவானி சங்கரும் இணைந்து நடிக்க உள்ளனர். இவர்கள் இருவரும் கமலுடன் இணைந்து முதல்முறையாக நடிக்க உள்ளனர்.