
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற வேண்டிய தயாரிப்பாளர் சங்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் மேற்பார்வையில் தேர்தல் ஏப்ரல் 02, அன்று நடந்தது.
தயாரிப்பாளர் சங்க பதவிக்கு விஷால், ராதாகிருஷ்ணன், கேயார் ஆகியோர் தலைமையில் 3 அணிகள் போட்டியிட்டனர். இதற்கான ஓட்டுப்பதிவு சென்னை அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் காலை 8 மணிக்கு துவங்கி தீவிரமாக அன்று மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதையடுத்து ஓட்டு எண்ணிக்கை மாலை 5 மணிக்கு துவங்கியது. ஓட்டுகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு விஷால் 143வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பொருளாளர் பதவிக்கு எஸ்.ஆர்.பிரபு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பட்டியல்
தலைவர்: விஷால்
துணைத் தலைவர்கள் : கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ்
கௌரவ செயலாளர்கள் : கே.இ. ஞானவேல்ராஜா, கதிரேசன்
21 செயற் குழு உறுப்பினர்கள் :
சுந்தர் .சி
பார்த்திபன்
பாண்டிராஜ்
ஆர்.வி. உதயகுமார்
மன்சூர் அலிகான்
எஸ்.எஸ். துரைராஜ்
ஆர்.கே. சுரேஷ்
ஆர்யா
எஸ். ராமச்சந்திரன்
ஜெமினி ராகவா
அபினேஷ் இளங்கோவன்
எ.எல். உதயா
எம். கஃபார்
பிரவீன்காந்த்
மனோஜ்குமார்
பி.எல். தேனப்பன்
எஸ்.வி. தங்கராஜ்
கே. பாலு
எம்.எஸ். அன்பு
எஸ்.எஸ். குமரன்
டி.ஜி. தியாகராஜன்
வெற்றி பெற்ற விஷால் பேசுகையில்
ஒட்டு அளித்த அனைத்து முதலாளிகளுக்கும் நன்றி. எங்கள் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது. வரலாற்று முக்கியத்துவமான விஷயங்கள் நடக்கப் போகிறது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு பொற்காலம் போல செயல்படுவோம். மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.
இளைஞர்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். திருட்டு விசிடி, ஆன்லைன் ப்ரைசி, தமிழ் ராக்கர்ஸ் ஆகியோருக்கு இப்போது சொல்கிறேன். நாங்கள் ஜெயித்து விட்டோம், இப்போது வந்து பாருங்கள். முதல்கட்டமாக விவசாயிகளுக்கும், சில தயாரிப்பாளர்கள் வைத்த கோரிக்கையும் நிறைவேற்ற பாடுவேன். எங்கள் அணியினர் ஜெயிப்பார்கள் என்று நம்புகிறேன்.

