Tuesday, April 28
Shadow

இன்று பிறந்த நாள் கொண்டாடும் கலைபுலி எஸ் தாணு பிறந்த தினம் அவரி பற்றிய சில வரிகள்

இவர் ஓர் இந்திய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் வெளியீட்டாளராவார். திரைத்துறையில் கலைப்புலி என அறியப்படும் இவர், கலைப்புலி பிலிம் இன்டர்நேசனல் மற்றும் வி கிரியேசன்சு மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

இவரது மகன் கலாபிரபு, சக்கரக்கட்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இவர் தனது திரைப்பட வாழ்க்கையை பைனான்சியர் மற்றும் விநியோகஸ்தராக தொடங்கினார். கலைபுலி பிலிம்ஸ் நிறுவனத்தில் பார்ட்னராக இணைந்து, பின்னர் வி. கிரியேஷன்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி காக்கா காக்கா, சச்சின், துப்பாக்கி, கபாலி போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

இவர் தயாரிப்பாளர் இருந்து தயாரித்த திரைப்படங்கள்

ஸ்கெட்ச், இந்திரஜித் வேலையில்லா பட்டதாரி 2, தேறி நல்லவன், வண்ண வண்ண பூக்கள், கிழக்குச் சீமையிலே, வி. ஐ. பி., மன்னவர் சின்னவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆளவந்தான், புன்னகைப் பூவே, காக்க காக்க, சச்சின், மாயாவி, தொட்டி ஜெயா, சென்னைக் காதல், திருமகன், சக்கரகட்டி, கந்தசாமி, துப்பாக்கி, அரிமா நம்பி, கணிதன், நையப்புடை, தெறி, கபாலி, இந்திரஜித்

இவரது வெளியிட்டில் வெளியான திரைப்படங்கள்

மிளகா, தொட்டுப் பார், பதினாறு, நேரெதிர், என்னமோ ஏதோ

இவர் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளராக பணியாற்றிய படம் 1999ல் வெளியான புதுப்பாடகன்,

இவர் நடிகராக சிறப்பு தோற்றத்தில் நடித்த திரைப்படம் மகளிர் மட்டும்.

இவர் 1992 வெளியான வண்ண வண்ண பூக்கள் திரைப்படத்திற்காக தேசிய விருது வென்றவர்.