Sunday, November 8
Shadow

கலைப்புலி தயாரிப்பில் சூர்யா & வெற்றி மாறன் உருவாக்கும் பட டைட்டில் ‘ *வாடிவாசல்*’

கலைப்புலிதாணுபுரொடக்‌ஷனில் தயாரான ‘அசுரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன், யாருடன் இணைய போகிறார் என பலவித தகவல்கள் வெளியான சூரியை கதாநாயகனாக வைத்து அடுத்து படம் இயக்கவுள்ளதாக வெற்றிமாறனே கூறியிருந்தார்.

கூடவே சூர்யா, விஜய் என பெயர்கள் அடிப்பட, அசுரன் படத்தை இயக்கிய கலைப்புலி தாணு-வின் ‘V’ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கவுள்ள புதிய படத்தில் சூர்யா(சூர்யா 40) நடிகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது.

இந்நிலையில் நேத்திக்கு நடைபெற்ற கடன் அவார்ட்ஸ் விருது விழா ஒன்றில், அசுரன் படத்திற்காக சிறந்த இயக்குனர் விருதை பெற்றார். அப்போது பேசிய வெற்றிமாறன், சூர்யா-வுடன் இணையவுள்ள படத்திற்கு ‘வாடிவாசல்’ என பெயரிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், ஜீவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.