Tuesday, December 7
Shadow

பப்ளிக் ஸ்டாரின் தீபாவளி வாழ்த்துகள்

தப்பாட்டம் மற்றும் ஜூலியும் நாலுபேரும் படங்களில் நடித்தவர் தான் துரை சுதாகர் இவருக்கு தப்பாட்டம் மூலம் தான் பப்ளிக் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்தது. காரணம் ஜூலியும் நாலுபேரும் படத்தில் வில்லனாக நடித்த இவரின் நடிப்பு பிடித்துபோக தான் இவருக்கு தப்பாட்டம் படத்தின் நாயகன் வேடம் கிடைத்தாம்.

அந்த படத்தில் தப்பாட்ட கலைஞனாக நடித்துள்ளார் அந்த படம் வர்த்தக ரீதியாக மக்களிடம் பெரும் வரவேற்ப்பு கிடைத்தது இதனால் இந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் இணைந்து கொடுத்த பட்டம் தான் பப்ளிக் ஸ்டார் பட்டம் என்றார்.

இவர் தஞ்சையை சேர்ந்தவர் இவருக்கும் சினிமாவுக்கும் சமந்தம் இல்லை நான் சினிமாவுக்கு வந்தது ஒரு விபத்து தற்போது பத்து படங்கள் மேல் நடிகுறேன் என்கிறார்.தற்போது நான் சினிமாவை மிகவும் காதலிக்குறேன் எனக்கான கதாபாத்திரம் இன்னும் கிடைக்கவில்லை அதற்காக நான் காத்துருக்கிறேன். என்கிறார் இவர் தஞ்சையை சேர்ந்த இவர் சினிமாவில் தனக்கென ஒரு இடைத்தை நிச்சயம் பிடிப்பேன் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.

விரைவில் பிரபல இயக்குனர் ஒருவருடன் இணைய இருக்கிறாம் அதற்க்கான செய்திகள் விரைவில் வரும் என்கிறார் அதோடு நான் ஹீரோ என்று எல்லாம் சொல்லவில்லை எனக்கு பேர் தரும் பாத்திரம் தான் முக்கியம் அதற்க்கா தான் காத்து இருக்கிறேன் பணம் என்பதை விட நல்ல நடிகன் என்ற பெயரை சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் மனதில் உள்ளது பணம் என்னிடம் தேவையான அளவு கொடுத்துள்ளான் கடவுள் வாழ்ந்தோம் சென்றோம் என்று இல்லாமல் சாதித்தோம் என்ற பெயர் வேண்டும் என்பதே ஆசை என்கிறார் .

ரசிகரகளுக்கு தீபாவளி வாழ்த்துகளோடு பாதுகாப்பான தீபாவளியாக கொண்டாடுங்கள் என்று கூறினார்.

Leave a Reply

CLOSE
CLOSE