Monday, October 3
Shadow

இயக்குநர்களுக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் டிஜிட்டல் தளங்கள் வாய்ப்பளிக்கின்றன.* *நடிகை நதியா பெருமிதம்

‘புத்தம் புது காலை விடியாதா..’ என்ற தொடர் மூலம் இயக்குநர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் டிஜிட்டல் தளங்கள் வாய்ப்பளிப்பதாக நடிகை நதியா தெரிவித்திருக்கிறார்.

நமது சமூகத்தின் அங்கமாகத் திகழும் பல்வேறு கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும் பிரதிபலிக்கும் பல்வேறு வகையான கதைகளை சினிமா சித்தரித்து வருகிறது. இதற்கு அண்மைய உதாரணமாக அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் தொடராக ஐந்து அத்தியாயங்களைக் கொண்ட தமிழ் தொகுப்பாக வெளியாகும் ‘புத்தம் புது காலை விடியாதா..’ தொடர். இந்த தொடரில் காதல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கம் குறித்த பல்வேறு கதைகளை பார்வையாளர்கள் கண்டு ரசிக்க இயலும். இந்த தொகுப்பில் ஐந்து அத்தியாயங்கள் உள்ளன. அவற்றில் ‘மௌனமே பார்வையாய்’ என்ற அத்தியாயமும் இடம்பெற்றிருக்கிறது. இதனை இயக்குநர் மதுமிதா இயக்கியிருக்கிறார். இதில் நடிகை நதியா மொய்து மற்றும் நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளனர்.

இந்நிலையில் முன்னணி நடிகையும் திரை உலகில் மூத்த நடிகையுமான நதியா மொய்து, ஓ டி டி எனப்படும் டிஜிட்டல் தளங்களின் வருகை குறித்தும், அதன் பலன்கள் குறித்தும் தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில்,” நடிகர்களை விட இயக்குநர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு டிஜிட்டல் தளங்கள் முன்னுரிமை கொடுக்கின்றன. இதனால் அவர்கள் தங்களது கதைகளை நேர்த்தியாக சொல்ல இயலும். மேலும் ஓ டி டி உலக அளவிலான பார்வையாளர்களை வழங்குகிறது. நீங்கள் எந்த மொழியில் பார்க்கிறீர்கள் என்பது முக்கியமல்ல.. நிச்சயமாக நீங்கள் உங்களது தாய்மொழியில் படைப்புகளை பார்த்துக்கொண்டிருப்பது பெரியதொரு சவுகரியத்தை தருகிறது. ஆனால் குற வெவ்வேறு மாநில மக்கள், அவர்களின் கலாச்சாரங்கள்.. ஆகியவற்றை, உலகின் வேறு பகுதிகளில் வாழும் மக்கள் தங்களுடைய விசயங்களை எவ்வாறு பார்க்கப்படுகின்றன என்பதை இத்தகைய டிஜிட்டல் தள படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. இவை அனைத்தும் மக்கள் வித்தியாசமாக சிந்திக்க உதவுகிறது.” என்றார்.

‘நோக்கேத தூரத்து கண்ணும் நாட்டு’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் 1985ஆம் ஆண்டில் நடிகை நதியா அறிமுகமானார். மோகன்லால் மற்றும் பத்மினியுடன் இணைந்து அவர் மலையாள திரைப்படப் பிரிவில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். அதன் முதல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரை உலகில் சிறந்த நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

‘திரிஷ்யம் 2’ படத்திற்குப் பிறகு நடிகை நதியா மொய்து நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் தொடர், ‘புத்தம் புது காலை விடியாதா’, 2022 ஜனவரி 14ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் இந்தியாவிலும், உலக அளவில் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியாகிறது.

‘புத்தம் புது காலை’ தொடரின் முதல் பாகத்தைத்தொடர்ந்து இரண்டாம் பாகமாக தயாராகியிருக்கும் ‘புத்தம் புது காலை விடியாதா..’துன்பங்களை எதிர்கொள்ளும் மன உறுதி மற்றும் மன உறுதியை கொண்டாடும் இதயத்தை தூண்டும் கதையுடன் பார்வையாளர்களை மகிழ்விக்க வருகிறது.

Cinema has always been portraying different kinds of stories that are a part of our society and reflects different cultures and traditions. The latest original offering on Amazon Prime Video, the five episodes Tamil anthology, Putham Pudhu Kaalai Vidiyaadhaa… is one such example of cinema where audience can experience different stories of love, hope and new beginnings created by diverse filmmaking styles and perspectives. The anthology has 5-episodes and one of them is Mouname Paarvayaai, directed by Madhumita and starring Nadiya Moidu and Joju George. Recently, the lead actress, also a veteran in the film industry, spoke about the advent of OTT and its advantages.

“I think more than actors, we have given room to directors and script writers, who can say their stories directly,” said Nadiya Moidu and continued further, “OTT just gives that larger viewership— it doesn’t matter which language you are watching, of course… it’s a big comfort that you are watching in your own mother tongue. But at least people get exposed to different states, their cultures, how things are viewed in their part of the world. All these things have helped people to think differently.

Nadiya made her debut in the Malayalam film Nokketha Doorathu Kannum Nattu (1985), alongside Mohanlal and Padmini for which she won Filmfare Award for Best Actress – Malayalam. She has been in the industry for 30 years and has been a celebrated actress with Tamil, Malayalam and Telugu cinema.

After Drushyam 2, Nadiya Moidu will be seen in much awaited Amazon Original Series Putham Pudhu Kaalai Vidiyaadhaa…, which releases on 14 January 2022 on Amazon Prime Video in India and more than 240 countries and territories worldwide.

Following the success of the first edition, Putham Pudhu Kaalai Vidiyaadhaa… promises to enthrall audiences with a heartwarming narrative that celebrates the spirit of resilience and grit in the face of adversity.