Friday, May 1
Shadow

பியார் பிரேமா காதல் – திரைவிமர்சனம் (காதல் கவிதை) Rank 4/5

தமிழ் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ஒரு அழுத்தமான காதல் கதை வந்திருக்கிறது என்று தான் சொல்லணும் இன்றைய கலாச்சாரம் இன்றைய இளைஞர்களின் யதார்த்தை சொல்லி இருக்கும் படம் விஞ்ஞானம் எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கோ அந்த மாதிரி தான் உறவு முறைகள் மாறிவந்து கொண்டு இருக்கு என்று சொன்னால் மிகையாகது அது மாதிரியான ஒரு காதல் கதை தான் பியார் பிரேமா காதல் கதையும்

காதல் கல்யாணம் என்று மாறி தற்போது லிவிங் டு கெதேர் என்பது தான் வாழ்கை என்று மாறிவருகிறது அதை தான் இந்த பியார் பிரேமா காதல் படத்தின் கதையும் இயக்குனர் இலன் தமிழ் சினிமாவுக்கு மிகவும் தேவையான ஒரு இயக்குனர் அரைத்த மாவை அரைக்கும் மத்தியில் ஒரு வித்தியாசமான இயக்குனர் என்று சொல்லலாம் படத்தின் கதை மிக சிறிய லைன் ஆனால் படத்தின் திரைகதை ஒரு ஓவியம் போல வரைந்துள்ளார் .

படத்தின் கதையும் சரி காட்சியமைப்புகளும் சரி ஒரு ஹய்கூ கவிதை போல அமைத்துள்ளார் என்று சொன்னால் மிகையாகது அதேபோல இயக்குனர் எண்ணம் அறிந்து படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் தன் பங்கை கொடுத்துள்ளனர் இயக்குனர் கதையும் திரைகதையும் கவிதையாக சொல்லி இருக்கிறார் என்றால் ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குனர் இருவரும் ஓவியம் போல ஒவ்வொரு காட்சியும் அமைத்துள்ளார்கள் இவர்களுக்கு போட்டியாக இசையமைப்பாளர் தன் இசை பாடல்களை அவர் பங்குக்கு செவிக்கு விருந்து கொடுத்துள்ளார் மொத்தத்தில் படத்தில் பங்கு பெற்ற அனைவரும் அவர்களின் பங்கை மிகவும் அருமையாக கொடுத்துள்ளனர்

நடித்தவர்கள் நாங்கள் மட்டும் என்ன என்று அவர்களின் பங்கை மேலும் பலம் சேர்த்துள்ளனர் ஹாரிஸ் கல்யான் நாயகி ரைஸா வில்சன் அவரின் அப்பாவாக ஆனந்த் பாபு நாயகன் அம்மாவாக ரேகா அப்பாவாக பாண்டியன் நண்பர்களாக தீப்ஸ். முனீஸ் காந்த் மற்றும் பஞ்சு சுப்பு மற்றும் பலர் நடிப்பில் ராஜா பட்டார்ச்சார்யா இசை யுவன் சங்கர் ராஜா அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் வந்து இருக்கும் படம் பியார் பிரேமா காதல்

படத்தின் கதை நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஹாரிஸ் பணக்கார பெண் ரைஸா இருவரும் ஐடி கம்பனியில் வேலை செய்கிறார்கள் இருவருக்கும் காதல் ஏற்ப்படுகிறது கல்யாணம் முன்னே இருவரும் உடல் உறவு செய்து விடுகிறார்கள் இதனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஹரிஷ் திருமணம் செய்துகொள்ளலாம் என்று சொல்லுகிறார் ஆனால் ரைஸா வேண்டாம் நாம் லிவிங் டு கெதேர் முறையில் வாழலாம் என்று சொல்லுகிறார். ஆனால் ஹரிஷ் திருமணம் குடும்பம் வாழ்கை குழந்தை என்று சொல்லுகிறார் அதற்கு நேர் எதிர்மாறான கருத்தை சொல்லுகிறார் வாழ்கையில் எனது லட்சியம் அடையாமல் திருமணம் குழந்தை இதற்கு இடம் இல்லை என்று சொல்லுகிறார் இதனால் இருவரும் பிரிகிறார்கள்

ஹரிஷ் வேறு திருமணம் செய்கிறார் ஆனால் ஆனந்த் பாபு அறிவுரையில் மனம் திரும்பி தீர்மானம் நடக்கும் மண்டபத்துக்கு வருகிறார் அனால் அதுக்குள் திருமணம் முடிந்து போகிறது இதனால் மனம் உடைந்த ரைஸா இந்த ஊரை விட்டே போகிறார் இந்த ஹரிஷ் ரைஸா காதல் மீண்டும் இணைந்தார்களா இல்லை என்ன ஆனது என்பது தான் மீதி கதை

ஹரிஷ் இப்படி ஒரு துடிப்பான ஹீரோவா என்று வியக்க வைக்கிறார் சில படங்கள் நடித்து இருந்தாலும் இந்த படம் அவருக்கு மிக பெரிய வாய்ப்பு என்று தான் சொல்லணும் இந்த வாய்ப்பை மிக அழகாக பயன்படுத்தியுள்ளார் நடிப்பிலும் நடனத்திலும் சற்று மேலோங்கி நிற்கிறார் நிச்சயம் தமிழ் சினிமாவில் மிக பெரிய இடத்தை பிடிப்பார் நல்ல எதிர்காலம் காத்தும் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை

அதேபோல நாயகி ரைஸா படத்துக்கு மிக பெரிய பலம் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார் இந்த கதைக்கு என்ன தேவையோ அதை பஞ்சம் இல்லாமல் கொடுத்து நடித்து இருக்கிறார் இளமை துடிப்பு நடிப்பிலும் அற்புதமாக இருக்கிறார் அதேபோல அழகிலும் கொஞ்சம் இல்லை அதிகம் சுண்டி இருழுக்கிறார் நடிப்பிலும் சரி பிரித்து மேய்ந்து இருக்கிறார் மொத்தத்தில் கோலிவுட்க்கு அழகு நடிப்பு எல்லாம் கலந்த ஒரு நடிகை கிடைத்துள்ளார்

குறைந்த கதாபாத்திரம் இருந்தாலும் எல்லோரும் மிக சிறப்பாக நடித்துள்ளனர் படத்துக்கு மிக பெரிய பிளஸ் ஒளிபதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் யுவனும் என்று சொல்லணும்

இசையமைப்பாளர் யுவன் இந்த படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் அதையும் மிகவும் அவரின் இசை போல தேர்ந்த்டுத்து தயாரித்து ஒரு நல்ல காதல் கவிதையை கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் பியார் பிரேமா காதல் ஒரு காதல் கவிதை இளமை திருவிழா Rank 4/5