Monday, December 6
Shadow

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படத்தின் படபிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்

தமிழ் சினிமாவின் காலத்தால் அழிக்க முடியாத ஒரு படம் என்றால் அது ராதா மோகனின் மொழி படம் என்று சொல்லலாம் காரணம் அந்தபடத்தின் வெற்றிமட்டுமில்லை படத்தின் கதையும் தான் மக்களை மிகவும் கவர்ந்தது அதோடு இந்த படத்தின் பாடல்கள் மிக பெரிய வெற்றியை கொடுத்தது அன்று எல்லோரும் முணுமுணுக்கும் பாடல் என்றால் காற்றின் மொழி என்ற பாடல் இன்றும் பலரால் ரசிக்கும் ஒரு பாடலாக அமைந்துள்ளது .

மொழி படத்துக்கு பிறகு மீண்டும் ராதாமோகன் மற்றும் ஜோதிகா மீண்டும் இணையும் படம் என்றால் அது காற்றின் மொழி இந்த படத்தில் ஜோதிகா ஒரு ரேடியோ ஜாக்கியாக நடிக்கிறார். இந்த படம் குமரி சுளு என்று ஹிந்தியில் வெளிவந்து மிக பெரிய வெற்றி பெற்ற படம் இந்த படத்தின் தமிழ் ஆக்கம் தான் காற்றின் மொழி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் விதார்த் M.S.பாஸ்கர், மோகன்ராம், மனோபாலா, மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பம் ஆனது இந்த படத்தின் படபிடிப்பு கீழ்பாக்கத்தில் உள்ள மிக பெரிய ஒரு பங்களாவில் இன்று பூஜையுடன் படபிடிப்பு ஆரம்பம் ஆனது இந்த நிகழ்வில் கிள்ளி பட இயக்குனர் தரணி சிவகுமார் விதார்த் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக சிவகுமார் மற்றும் சூர்யா கலந்து கொண்டனர் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது இந்த படத்தை போப்டா நிறுவனத்தின் தலைவர் தனசெழியன் தயாரிக்கிறார்

CLOSE
CLOSE