Sunday, December 8
Shadow

ராஜ பீமா படபிடிப்பில் காயம் அடைந்த ஆரவ்

ஊடகங்களின் கவனம் முழுவதும் சின்னத்தம்பி என்னும் யானை மீது இருக்க , தற்போது தாய்லாந்தில் புதிய இயக்குனர் நரேஷ் இயக்கத்தில், ஆரவ் ஒரு யானையுடன் நடிக்கும் “ராஜபீமா” படத்தின் செய்திகள் அதற்கு இணையாக வருகிறது.

” ராஜபீமா ஒரு விலங்கு சார்ந்த திரைப்படம். இப்படத்தில் நடிகர் ஆரவ் உடன் ஒரு யானையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. படத்தின் முக்கியமான காட்சிகளை தாய்லாந்தில் படம் பிடிக்கும் குழுவினர், ஒரு சில காட்சிகளை பொள்ளாச்சியிலும் படம் பிடித்தனர் .

கடந்த 7 நாட்களாக கஞ்சன்புரியின் அடர்ந்த காடுகளில் , மற்றும் ஓங்கி வளர்ந்த ராட்சச மரங்கள் இடையேயும் படமாக்கி வருகின்றனர்.

நடிகர் ஆரவ் மற்றும் பீட்டர் எனும் யானை சம்மந்தப்பட்ட காட்சிகளை படம் பிடித்த பொழுது, துருதிருஷ்டவசமாக யானை மேல் இருந்து கீழே விழுந்தார். படப்பிடிப்பு குழுவினர் மருத்துவ உதவியை உடனே நாடினர். எனினும் கட்டுமஸ்தான உடல் வலிமையும், மனத்திடமும் கொண்ட ஆரவ் , தயாரிப்பு தரப்பிலிருந்து முதலுதவி வருவதற்குள் படப்பிடிப்பில் இணைந்தார்.

“இதுவே அவரின் அர்பணிப்பையும் பேரார்வத்தையும் காட்டுகிறது. இன்னும் 7 நாட்களில் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நிறைவுபெரும். சென்னையில் கடைசி கட்ட படப்பிடிப்பு எஞ்சியுள்ள நிலையில் ராஜபீமா கோடை விருந்தாக திரைக்கு வரும்” என்றார் தயாரிப்பாளர் S.மோகன் , சுரபி பிலிம்ஸ்.