Saturday, October 10
Shadow

மக்களுக்கு நல்லது செய்வதே நோக்கம்: ரஜினி – Exclusive

சென்னை: அரசியல் என்பது பொதுநலம். சுயநலமல்ல. மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே நமது நோக்கம் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். துாத்துக்குடி நிர்வாகிகள் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியின் வீடியோ பதிவில் ரஜினி பேசியுள்ளார். அதில் உள்ளதாவதுஆண்டன் அளித்துள்ள வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவருவோம். குடும்பத்தை விட்டு அரசியலுக்கு வரவேண்டும் என நான் சொல்லவில்லை. அவர்களையும் கவனிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply