Sunday, June 14
Shadow

Tag: #rajini

ரஜினியால் சந்திரமௌலிக்கு வந்த பிரச்சனை

ரஜினியால் சந்திரமௌலிக்கு வந்த பிரச்சனை

Latest News, Top Highlights
விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு பிறகு இயக்குநர் திரு இயக்கும் புதிய படம் ‘Mr.சந்திரமௌலி’. இதில் கார்த்திக் மற்றும் அவரது மகன் கெளதம் கார்த்திக் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். இதனை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார். கெளதம் கார்த்திக்கு ஜோடியாக ரெஜினா, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்திருக்கிறார்கள். மேலும், இயக்குநர்கள் மகேந்திரன் – அகத்தியன், சதீஷ், சந்தோஷ் பிரதாப், மைம் கோபி, விஜி சந்திரசேகர், மனோபாலா, ஜெகன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறதாம். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இதற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் ...
காலா சண்டைக்காட்சி லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி

காலா சண்டைக்காட்சி லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் `காலா' படத்தை முன்னதாக வெளியிட படக்குழு திட்டமிட்டு சமீபத்தில் ரிலீஸ் தேதியையும் அறிவித்தது. அதன்படி `காலா' படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. `கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி - பா.இரஞ்சித் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 14 நொடிகள் அடங்கிய அந்த வீடியோவில் தன்னை அடிக்க வரும் ஒருவரை, ரஜினி உதைப்பது போன்று அந்த வீடியோ முடிகிறது. அந்த வீடியோவின் பின்னணியில் தீப்பற்றி எரிவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந...
ரஜினியை ஏன் ஆதரிக்கிறோம் ?? ஒரு ரசிகனின் வரிகள்…

ரஜினியை ஏன் ஆதரிக்கிறோம் ?? ஒரு ரசிகனின் வரிகள்…

Latest News, Top Highlights
நான் ரஜினியைத் தொடர்ந்து ஆதரித்து எழுதி வருவதைப் பார்த்த சில பேர், இவன் ஒரு படித்த முட்டாள், நடிகர்கள் பின்னால் செல்பவன் என்று தொடர்ந்து நாகரிகம் இல்லாமல் கூறி வருகிறார்கள்.. இவர்களுக்கான பதிவு தான் இது. நான் ஒரு படித்த முட்டாள் என்று கூறுகிறார்கள். என்னவோ ரஜினிக்கு எதிராக களத்தில் காமராஜரும், அண்ணாதுரையும் இருப்பதை போலவும், நான் அவர்களை விட்டு விட்டு ரஜினியை ஆதரிப்பது போலவும் கூறி வருகிறார்கள். களத்தில் ரஜினியோடு நிற்கும் ஒரே ஒரே தலைவராவது, உழைத்து சம்பாதித்து கட்சி நடத்துபவராக இருக்கிறாரா?(நடிகர்களைத் தவிர). நல்லகண்ணு அய்யா இருக்கிறாரே?? என்று கூறுவார்கள். கடைசியாக அவருடைய இடதுசாரி இயக்கம், தேர்தலில் நிற்க அவருக்கு சீட்டு கொடுத்தது எப்பொழுது என்று உங்களுக்கு தெரியுமா? இடதுசாரி இயக்கம் முதலில் அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கத் தயாரா? ஏண்டா? தேர்தலியே நிற்காத ஒருவரை எப்படி ஆதரிக்க ...
ரஜினி மன்றத்தில் 50 லட்சம் பேர் இணைந்தனர்!

ரஜினி மன்றத்தில் 50 லட்சம் பேர் இணைந்தனர்!

Latest News, Top Highlights
நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பித்திருக்கும் ரஜினி மன்றத்தில் இதுவரை 50 இலட்சம் பேர் மன்றத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன் தான் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார். ரஜினி அதற்காக புதிய இணையதள முகவி ஒன்றையும் அறிவித்தார். www.rajinimandram.org என்கிற முகவரி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதன் மூலமாக பொதுமக்கள் ரஜினி மன்றத்தில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து பதிவு செய்து வருகிறார்கள். இதுவரையில் 50 லட்சம் பேர் இணையதளம் மூலமாக ரஜினி மன்றத்தில் இணைந்துள்ளனர். பலதரப்பட்ட மக்களும் ரஜினி மன்றத்தில் போட்டி போட்டு இணைந்து வருகின்றனர். இன்னும் பலர் ரஜினி மன்றத்தில் தங்களை இணைத்து வருகின்றனர்....
நெல்லை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிவிப்பு

நெல்லை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிவிப்பு

Latest News, Top Highlights
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற அதிகாரப்பூர்வ நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வெளியிட்டார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார். ஆனால், கட்சி சின்னம், பெயர் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதேசமயம், ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் இணையதளம் மற்றும் செயலி வெளியிடப்பட்டு ரஜினி ரசிகர்களை ஒரு குடையின் கீழ் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, தனது நம்பிக்கைக்கு பாத்திரமான சிலரைக் கொண்டு ஒரு குழுவை அமைத்துள்ள ரஜினி, அவர்களை கொண்டு ரசிகர் மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமித்து வருகிறார். முதற்கட்டமாக வேலூர் மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செ...
மக்களுக்கு நல்லது செய்வதே நோக்கம்: ரஜினி – Exclusive

மக்களுக்கு நல்லது செய்வதே நோக்கம்: ரஜினி – Exclusive

Latest News, Top Highlights
சென்னை: அரசியல் என்பது பொதுநலம். சுயநலமல்ல. மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே நமது நோக்கம் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். துாத்துக்குடி நிர்வாகிகள் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியின் வீடியோ பதிவில் ரஜினி பேசியுள்ளார். அதில் உள்ளதாவதுஆண்டன் அளித்துள்ள வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவருவோம். குடும்பத்தை விட்டு அரசியலுக்கு வரவேண்டும் என நான் சொல்லவில்லை. அவர்களையும் கவனிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்....
ரஜினியுடன், தமிழரசன் சந்திப்பு…  தலித் அரசியல் குறித்து விவாதம்!

ரஜினியுடன், தமிழரசன் சந்திப்பு… தலித் அரசியல் குறித்து விவாதம்!

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த மாதம் அறிவித்தார். அதிலிருந்து பல கட்சித் தலைவர்களை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். இந்நிலையில் இந்திய குடியரசு கட்சித் தலைவர் தமிழரசன் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இது குறித்து பேசிய தமிழரசன், ‘ அடித்தட்டு மக்களிடம் ​செல்வாக்கை பெற்றவர் ரஜினி. மக்களுக்கு உழைக்க ரஜினி அதிக ஆர்வத்துடன் உள்ளார். தலித் அரசியல் குறித்து ரஜினியுடன் பேசினேன்.’ என்று கூறீனார்....
என்னுடைய வாழ்வில் அதுவரை கிடைக்காத ஒரு சந்தோஷம்… நெகிழ்ச்சியில் டிஎஸ்பி!

என்னுடைய வாழ்வில் அதுவரை கிடைக்காத ஒரு சந்தோஷம்… நெகிழ்ச்சியில் டிஎஸ்பி!

Latest News, Top Highlights
விக்ரம் நடிப்பில் ஹரியின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்த இசையமைப்பாளர் *தேவி ஸ்ரீபிரசாத் வழக்கத்தை விட கூடுதலான மகிழ்ச்சியுடன் வேலை செய்து கொண்டிருந்தார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, ‘தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய நட்சத்திர கலைவிழாவில் நான் மேடையில் பாட்டுப் பாடிக் கொண்டே நடனமாடினேன். விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற என்னுடைய நிகழ்ச்சியை, அனைத்து திரையுலக நட்சத்திரங்களுடன் முன் வரிசையில் அமர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ரசித்து கேட்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பலரும் எழுந்து நின்று மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர். இது என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. அப்போது நான் மேடையிலிருந்து இறங்கி சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த போது, அவர்கள...
ரஜினிக்கு நானே தொண்டன்… அவருக்காக ரோட்ல இறங்குவேன் – விஷால்!

ரஜினிக்கு நானே தொண்டன்… அவருக்காக ரோட்ல இறங்குவேன் – விஷால்!

Latest News, Top Highlights
டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி தனது அரசியல் பாதையை துவங்கி வைத்தார் ரஜினி. சில இடங்களில் எதிர்ப்பும் பல இடங்களில் ஆதரவும் வந்த வண்ணம் உள்ளன. மூத்த கலைஞர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் ரஜினியை வாழ்த்து வரவேற்றுள்ளனர். ரஜினியின் அரசியல் குறித்து விஷால் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கட்சி தொடங்கி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக ரஜினி சார் அறிவித்துள்ளார். அரசியல் என்பதும் சமூக சேவைதான். தலைவன் அரசியல்ல இறங்கிட்டார். நான் அவருக்குத் தொண்டனா ரோட்ல இறங்கி அத்தனை தொகுதியிலும் பிரச்சாரம் பண்ணுவேன். அவருக்கு உதவியா இருப்பேன்," என்றார்....
தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.. உருகிய ரஜினி!!

தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.. உருகிய ரஜினி!!

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் அவர் பேசியதாவது… என் அரசியல் அறிவிப்பை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி. ஊடகங்களை எப்படி கையாள்வது என்றே எனக்கு தெரியவில்லை. தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். நானும் 2 மாதங்கள் பத்திரிக்கை துறையில் பிழை திருத்தும் ஆசிரியராக பணிபுரிந்துள்ளேன். நான் முதன் முதலில் பொம்மை பத்திரிக்கைக்குதான் பேட்டியளித்தேன். என் அரசியல் பணிக்கு ஊடகங்களின் உதவி தேவை. நம் எல்லோருக்கும் கடமை உள்ளது. மிகப்பெரிய புரட்சி எல்லாம் தமிழகத்தில் இருந்து தான் துவங்கியுள்ளது. விரைவில் உங்களை சந்தித்து கட்சி கொடி பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன்....