
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சமீபத்தில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மற்றும் ஆடியன்ஸ்களிடம் பாசிட்டிவ் ரிவியூவை கொண்டு வந்தது. ரஜினிகாந்த் அடுத்த படத்தில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரிந்ததே. இந்நிலையில், இந்த அப்தம் குறித்த பெரியளவிலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துப்பாக்கி மற்றும் ஸ்பைடர் படங்களில் இயக்குனர் முருகதாஸ் உடன் பணியாற்றிய சந்தோஷ் சிவன், முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் இணைந்துள்ளார். ஏற்கனவே சந்தோஷ் சிவன், மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியான தளபதி படத்தில் பணியாற்றியுள்ளார்.
இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்த சந்தோஷ் தனது டுவிட்டர் பதிவில், தளபதி படத்திற்கு பின்னர் ரஜினி சார் உடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக இருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். சந்தோஷ் சிவன், மணிரதனம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான செக்க சிவந்த வானம் படத்தில் பணியாற்றி இருந்தார்.
சந்தேஷ் இணைப்பால் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த பெயரிடப்படாத படத்தில் பணியாற்றும் மற்ற நபர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை
