சமீபமாக தமிழ் சினிமா மிகவும் அமைதியாக இருந்தது ஆனால் கடந்த மூன்று நாட்களாக புயலாக மாறியுள்ளது அதுவும் பாலா புயல் விக்ரம் மகனுக்கு எகிராக

கடந்த இரு தினங்களுக்கு முன் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் அறிமுகமாகும் ‘வர்மா’ படம் திருப்தி தராததால் அதனை வெளியிடாமல் குப்பையில் போடுவதாக தயாரிப்பு நிறுவனமான ‘இ4 என்டர்டெயின்மென்ட்’ அறிவித்தது. இச்செய்தி தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலாவுக்கு ஆதரவாக இயக்குநர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியும் நடந்தது. படத்தில் என்ன குறை என்பதை இயக்குநர்கள் பார்வையில் காட்டாமல் அதை அழிக்கக் கூடாது என்று இயக்குநர்கள் போர்க்குரல் எழுப்பினர்.

இந்நிலையில் பாலா நேற்று மௌனம் கலைத்தார். அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில்…

“வர்மா படத்தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால் இந்த விளக்கத்தைத் தரவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறேன்.

படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்திலிருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு.

ஜனவரி 22 ஆம் தேதியே தயாரிப்பாளர் உடன் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டேன்.

bala

துருவ் விக்ரமின் எதிர்கால நலன்கருதி மேலும் பேச விரும்பவில்லை..!” என்று தயாரிப்பாளருடன் தான் செய்து கொண்ட ஒப்பந்தப் பத்திரத்தையும் அளித்திருந்தார்.

இத்துடன் இப்பிரச்சினை முடிந்தது போல் தெரிந்தாலும் இதன் பின்னணி என்ன என்பதுதான் அனைவருக்குமெழும் கேள்வி.

அதற்கு பாலாவின் விளக்கத்திலேயே விடையுமிருக்கிறது. அவர் அறிக்கையின் கடைசி வரியில் ‘துருவ் விக்ரமின் எதிர்கால நலன்கருதி மேலும் பேச விரும்பவில்லை’ என்று அவர் குறிப்பிட்டிருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது.

தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்குமான உரசலில் ஏன் சம்பந்தமில்லாமல் துருவ் பெயரை பாலா கொண்டுவந்தார் என்பது முக்கிய கேள்வி. ஆக, இந்தப் பிரச்சினையில் துருவ் விக்ரமின் பங்கு பெரிதாக இருப்பதும், அவருக்கு நடிப்பு வரவில்லை அல்லது இயக்குநர் சொல்வதைக் கேட்கவில்லை என்பது தெளிவாகவே புரிகிறது. இதன் பின்னணியில் அவர் தந்தை விக்ரம் இருக்கிறாரா என்பதும் புரியவில்லை.

ஏனென்றால் தன் மகனின் அறிமுகப் படத்தை பாலாதான் இயக்க வேண்டுமென்பதில் விக்ரம் குறியாக இருந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

என்ன நடந்ததோ… போகப் போக முழு விவரமும் தெரிய வரும்.

Related