Thursday, October 29
Shadow

இயக்குனர் சிவா இயக்கதில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

ரஜினிகாந்த், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது.

இப்படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சிவா இயக்கப் போவதாக முன்னரே செய்திகள் வெளியாகின. இருவரும் இரண்டு முறை சந்தித்து பேசினர். இப்போது அது உண்மையாகிவிட்டது. சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

‘எந்திரன், பேட்ட’ ஆகிய படங்களுக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படம் இது. ரஜினியின் 168வது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.