ரஜினிகாந்த நடிக்கும் அடுத்த படம் அதாவது அவரின் 164 வது படம் இந்த படத்தை கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித் இயக்குகிறார். அஹனுஷ் இந்த படத்தை தயாரிக்கிறார், இந்த படத்தின் படபிடிப்பு எப்போ தலைப்பு என்ன என்று ரசிகர்கள் ஏங்கி கொண்டு இருக்கும் போது படத்தின் முதல் பார்வை வெளியானது. ஆனால் ரசிகர்களுக்கு ஒரு திகைப்பு காரணம் படத்தின் டைட்டிலே யாருக்கும் புரியவில்லை ஆனால் ஒரு சந்தோசம் அவரில் லுக் ஸ்டைல் ஆனாலும் இந்த டைட்டில் அர்த்தம் என்ன என்று குழம்பிய ரசிகர்களுக்கு இதோ விளக்கம் அளிக்கிறார் இயக்குனர் ரஞ்சித்
காலா என்ற பெயர் ரஜினிகாந்துக்கு பிடித்த ஒன்று என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு ’காலா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் பற்றி இயக்குனர் பா.ரஞ்சித் கூறும்போது, ’காலான்னா, காலன், எமன்னு சொல்லலாம். கரிகாலன் என்பதோட சுருக்கப்பட்ட வடிவம்தான், காலா. மும்பையில் செட்டிலான நெல்லை மக்களின் வாழ்க்கைதான் படம். 28-ம் தேதி ஷூட்டிங் தொடங்குகிறது. யார், யார் நடிக்கிறார்கள் என்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும். இது ரசிகர்ளுக்குப் பிடித்த படமாக இருக்கும். கரிகாலன் ரஜினிக்கு பிடித்த பெயர்’ என்றார்.