Friday, January 17
Shadow

ரஜினி புதிய கட்சி துவக்கம் எப்போது?

  1. மே மாதத்தில், புதிய கட்சி துவக்குவது குறித்து, மன்ற நிர்வாகிகளுடன், நடிகர் ரஜினி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் ரஜினி, 10 நாள் ஆன்மிக பயணமாக, இமயமலைக்கு சென்றிருந்தார். அப்பயணத்தை முடித்து, நேற்று முன்தினம், சென்னை திரும்பினார். அரசியல் பயணம் குறித்து, தன் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன், நேற்று ஆலோசனைநடத்தினார்.

    அப்போது, புதிய கட்சியை, மே மாதத்தில் துவக்கலாமா என, விவாதித்துள்ளார் அதற்கான பணிகளையும், அவர் முடுக்கி விட்டுள்ளார்.

    புதிய கட்சியின் துவக்க விழாவை, சென்னை அல்லதுகோவையில் நடத்த, அவர் திட்டமிட்டு
    உள்ளார். இம்மாத இறுதிக்குள், அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கையை முடிக்கவும், புதிய நிர்வாகிகளை நியமிக்கவும், மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பின், புதிய நிர்வாகிகளை அழைத்து, சென்னையில், நேர்காணல் நடத்தவும், ரஜினி தீர்மானித்துள்ளார்.