Thursday, December 5
Shadow

Tag: rajinikanth

வைரலாகி வரும் ரஜினியுடன் வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ் புகைப்படம்

வைரலாகி வரும் ரஜினியுடன் வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ் புகைப்படம்

Latest News, Top Highlights
நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் ‘காஞ்சனா 3’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்த இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். ஹிந்தி பதிப்பில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு 'லக்‌ஷ்மி பாம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றுள்ளார். அதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைராகி வருகிறது....

லீக்கான ரஜினியின் தர்பார் படப்பிடிப்பில் ஸ்டில்கள்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினி பேட்ட படத்தை தொடர்ந்து தர்பார் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பிற்கு முன்னே போட்டோ ஷுட் எல்லாம் நடந்து ஃபஸ்ட் லுக்கும் வெளியாகிவிட்டது. அதை பார்த்து கதை இப்படி தான் இருக்கும் என பலர் தங்களது கற்பனை திறனை வெளிக்காட்டியுள்ளார்கள். படத்தின் ஷுட்டிங் மும்பையில் வேகமாக நடந்து வருகிறது, இதில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு இணைந்ததாக கூறப்படுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் தர்பார் படத்தில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. பேட்ட படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் 167ஆவது படமான தர்பார் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். கடந்த 10ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில், பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில், ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, பிரதீக் பாப்பர் என்ற பாலிவுட் நடிகர் ஆகிய...
ரஜினி – ஏ.ஆர்.முருகதாஸ் ‘தர்பார்’ நாளை தொடங்குகிறது

ரஜினி – ஏ.ஆர்.முருகதாஸ் ‘தர்பார்’ நாளை தொடங்குகிறது

Latest News, Top Highlights
'பேட்ட' படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. நாளை (ஏப்ரல் 10) மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது இந்த படம் குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், படக்குழு. 'தர்பார்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். மேலும், 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்....
ரஜினியின்  மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தேதி  வெளியானது

ரஜினியின் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தேதி வெளியானது

Latest News, Top Highlights
பேட்ட படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இது ரஜினிகாந்தின் 166-வது படம். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும், சமூக ஆர்வலராகவும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தில் மட்டுமே ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். பேட்ட படத்தை அடுத்து இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இந்தப் படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கு படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு தெரிவித்திருந்தார். த...
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி கோரிக்கையை ஏற்று சாலை மறியல் கைவிட்ட பொதுமக்கள்…

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி கோரிக்கையை ஏற்று சாலை மறியல் கைவிட்ட பொதுமக்கள்…

Latest News, Top Highlights
கஜ புயலால் பெரும் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளுக்கு நிவாரணம் செய்து வருகின்றனர் அந்த வகையில் நாகை மாவட்டத்தில் அடங்கியுள்ள ஒரு சிறு கிராமம் தான் அத்திமடை கிராமாக மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக யாரும் கவனிக்கபடாத நிலை அங்கு இருக்கும் மக்கள் போராட்டத்தில் இறங்க ஆரம்பித்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதோடு அதன் சுற்றியுள்ள கிராம நிவாரண பணியும் தடைபட்டது அந்த நேரத்தில் அங்கு வந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி கோரிக்கையை ஏற்று சாலை மறியல் கைவிட்ட பொதுமக்கள்......
ரஜினி மற்றும் மீமிஸ் கிரியேட்டரை வெளுத்து வாங்கிய சரத்குமார்

ரஜினி மற்றும் மீமிஸ் கிரியேட்டரை வெளுத்து வாங்கிய சரத்குமார்

Latest News, Top Highlights
சென்னை : April 16 கேப்டன் விஜய்காந்த் தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் அவர் மையில் கல்லாக இருக்கிறார் என்பது எவ்வித ஆச்சிரியமும் இல்லை.அவர் தமிழ் சினிமாக்கு வந்து 40 வருடங்கள் கடந்து விட்டது. அவரை பெருமை படுத்தும் விதமாக சினிமா நடிகர்களை அழைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினர். அதில் கலந்து கொண்ட சரத்குமார் சிலரை விமர்சி்த்து பேசினார். அவர் பேசினது.இதோ!!! தமிழ் சினிமாவில் 40 வருடங்களை கடந்த கேப்டன் விஜய்காந்த்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் திருமதி என்னுடைய வணக்கம். தமிழ் மக்களே நீங்கள் தப்பானவர்களுக்கும், தமிழ் நாட்டை காப்பாத்த தெரியாதவர்களுக்கும் நீங்கள் தேர்வு செய்கிறீர்கள். உங்களுக்கு ஒரு பிரச்சனைனா முன் வந்து நிற்ப்பது விஜய்காந்த், சரத்குமார், சத்யராஜ் தான் வேற யாருமில்லை மத்தவங்க எல்லாரும் ஓடி போவார்கள். இப்போது சில பேர் நல்லவன் போல் நடிக்கிறார்கள். மக்களே முதலில் யார் தமிழன்,தமிழ...
ரஜினி புதிய கட்சி துவக்கம் எப்போது?

ரஜினி புதிய கட்சி துவக்கம் எப்போது?

Latest News, Top Highlights
மே மாதத்தில், புதிய கட்சி துவக்குவது குறித்து, மன்ற நிர்வாகிகளுடன், நடிகர் ரஜினி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினி, 10 நாள் ஆன்மிக பயணமாக, இமயமலைக்கு சென்றிருந்தார். அப்பயணத்தை முடித்து, நேற்று முன்தினம், சென்னை திரும்பினார். அரசியல் பயணம் குறித்து, தன் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன், நேற்று ஆலோசனைநடத்தினார். அப்போது, புதிய கட்சியை, மே மாதத்தில் துவக்கலாமா என, விவாதித்துள்ளார் அதற்கான பணிகளையும், அவர் முடுக்கி விட்டுள்ளார். புதிய கட்சியின் துவக்க விழாவை, சென்னை அல்லதுகோவையில் நடத்த, அவர் திட்டமிட்டு உள்ளார். இம்மாத இறுதிக்குள், அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கையை முடிக்கவும், புதிய நிர்வாகிகளை நியமிக்கவும், மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பின், புதிய நிர்வாகிகளை அழைத்து, சென்னையில், நேர்காணல் நடத்தவும், ரஜினி தீர்மானித்துள்ளார்....
தமிழகதில் மத கலவரத்தை தூண்ட அனுமதிக்கக் கூடாது – ரஜினி

தமிழகதில் மத கலவரத்தை தூண்ட அனுமதிக்கக் கூடாது – ரஜினி

Shooting Spot News & Gallerys
தமிழகம் மதசார்பற்ற மாநிலம். இங்கு ரதயாத்திரையின்போது மதக் கலவரம் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். அரசியல் கட்சியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளுக்கு மத்தியில் கடந்த 10ம் தேதி ஆன்மிக யாத்திரையாக ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்றார். விமான நிலையித்தில் அவரிடம் காவிரி, பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கு அவர் பதில் ஏதும் கொடுக்காமல் சென்றுவிட்டார். 15 நாட்கள் என்று கூறப்பட்ட ஆன்மிக பயணம் 10 நாட்களாக சுருக்கப்பட்டது. இன்று இமயமலையில் இருந்து ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது போயஸ் தோட்டத்தில் அவர் பேட்டி அளிக்கையில் , இமயமலை சென்று திரும்பிய பிறகு புத்துணர்ச்சி அளிக்கிறது. ரத யாத்திரை மூலம் மதக் கலவரத்தை தூண்ட அனுமதிக்க கூடாது. ரத யாத்திரையின் போது மதக்கலவரம் உருவாகாமல் தடுக்க வேண்டும். தமிழகம் மதச்சார்பற்ற மாநிலம் ஆகும்...
அரசியலில் ரஜினிக்கு வெற்றி : தெலுங்கு பஞ்சாங்கம் கணிப்பு

அரசியலில் ரஜினிக்கு வெற்றி : தெலுங்கு பஞ்சாங்கம் கணிப்பு

Shooting Spot News & Gallerys
தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி விளம்பி நாம வருட பஞ்சாங்கம் நேற்று ஆந்திரா, தெலுங்கானாவின் முக்கிய கோவில்களில் அந்தந்த கோவில் தலைமை அர்ச்சகர்களால் வாசிக்கப்பட்டது. வரும் ஆண்டில் மழை எப்படி இருக்கும், இயற்கை பேரழிவு ஏற்படுமா? என்பது குறித்து கணித்துச் சொல்வார்கள். இது ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்ச்சி. நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் காளகஸ்தி சிவன் கோவில் அர்ச்சகர் பஞ்சாங்கத்தை படித்தபோது கூறிய அரசியல் தகவல்கள் பரபரப்பை கிளப்பி உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: வருகிற பார்லிமென்ட் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வரும். நரேந்திர மோடியே மீண்டும் பிரதமர் ஆவார். குஜராத், ராஜஸ்தான், ஒடிசா, பீகார் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு கணிசமாக குறையும். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ஒரு தொகுதியில்கூட பா.ஜ.க வெற்றி பெறாது. தெலுங்கானா சட்டசபை தே...
கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் தம்பியாக நடிக்கும் பிரபல நடிகர்

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் தம்பியாக நடிக்கும் பிரபல நடிகர்

Latest News, Top Highlights
ரஜினி நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகிறது. ரஜினி அடுத்ததாக, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் மூலம் ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு கிடைத்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குள் ரஜினி தனது அரசியல் பணிகளை ஓரளவு முடித்துவிட திட்டமிட்டிருக்கிறாராம். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பீட்சா’, ‘இறைவி’ படங்களில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். எனவே, ரஜினி நடிக்கும் இந்த படத்திலும் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்று செய்தி வெளியாகியது விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், ரஜினியின் தம்பியாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக புதிய தகவ...