Thursday, April 30
Shadow

என்னை 2-வது நாயகியாக்க நினைத்தால்… மிரட்டும் ரகுல் ப்ரீத் சிங்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். அடுத்ததாக ரஜாத் இயக்கத்தில் கார்தியுடன் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறார். அடுத்து அஜய் தேவ்கனுடன் ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இந்தியில் ‘அய்யார்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், 2-வது நாயகியாக ரகுல் நடிப்பதாக வெளியான செய்திக்கு பதில் அளித்த ரகுல் பிரீத் சிங், “நான் தற்போது நடிக்கும் படங்களில் முன்னணி நாயகியாக தான் நடித்து வருகிறேன். நான் நடிக்கும் படங்களில் வேறு நாயகிகளும் நடிக்கிறார்கள். என்றாலும், அவர்களை காரணம் காட்டி எனது பாத்திரத்தை எந்த இயக்குனரும் டம்மி ஆக்கவில்லை. 2-வது நாயகியாகவும் நடிக்கவில்லை.

மற்ற நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு என்னை 2-வது நாயகி ஆக்கினால், நான் அந்த படத்தில் இருந்து வெளியேறி விடுவேன் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.