Friday, March 13
Shadow

அடுத்த படத்திற்காக புதிய அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்

ஆரம்பத்தில் ஊர் சுற்றும் வாலிபராக காமெடி கலந்த வேடத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், ‘வேலைக்காரன்’ படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்தார். மோகன்ராஜா இந்த படத்தை இயக்கினார். இது சிவகார்த்திகேயனுக்கு புதுவிதமான படமாக அமைந்தது.

தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடிக்கிறார். இந்த படம் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ பாணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். முதல் படத்தில் ‘டைம் டிராவல்’ சம்பந்தப்பட்ட படத்தை இயக்கிய ரவிக்குமார் அடுத்து விஞ்ஞானி தொடர்பான கதையை இயக்குகிறார்.

வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானி கதை. எனவே, இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் விஞ்ஞானியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரத்திற்காக நியூ லுக்குக்கு சிவா மாற இருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறாராம். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறதாம்.