‘ராமாயணம்’ இசைப் பயணம் தொடங்கியது – ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியீடு!
சென்னை, செப்டம்பர் 25, 2026:
இந்தியாவின் பழம்பெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை பிரம்மாண்டமான திரை அனுபவமாக உருவாக்கி வரும் திரைப்படம் ‘ராமாயணம்’. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் இசைப் பயணம், முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ வெளியீட்டின் மூலம் தொடங்கியுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் பாடியுள்ளனர். பாடல் வரிகளை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். ஸ்ரீ ராமரின் திருநாமத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘ஜெய் ஜெய் ராம்’, பக்தி உணர்வையும் திரையிசையின் பிரம்மாண்டத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஸ்ரீ ராமரின் கருணை, பாதுகாப்பு, தர்மம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை மையமாகக் கொண்ட பாடல் வரிகள், அவரது திருநாமத்தை மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்து பக்தி உணர்வை ஏற்படுத்துகின்றன. ஆரத்தியின் ஆன்மீகத் தன்மையை நினைவூட்டும் இசை அமைப்புடன், திரையில் விரிவடையவிருக்கும் ராமாயணம் உலகத்திற்கான இசை அறிமுகமாகவும் இந்தப் பாடல் அமைந்துள்ளது.
இப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான நமித் மல்ஹோத்ரா, “தலைமுறை தலைமுறையாக நம் வாழ்வின் பல்வேறு தருணங்களில் ஸ்ரீ ராமர் நமக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். இருள் சூழ்ந்த நேரங்களிலும், குழப்பம் மற்றும் நிச்சயமற்ற சூழல்களிலும் அவரது பாதையைப் பின்பற்றுகிறோம். மகிழ்ச்சியான தருணங்களில் நன்றியுடன் அவரை நினைவுகூர்கிறோம். அந்த ஆழமான பிணைப்பிலிருந்துதான் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் உருவானது.
‘ராமாயணம்’ மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டாலும், அதன் உண்மையான வலிமை அதன் உணர்வுகளிலும், மதிப்புகளிலும், பக்தியிலும்தான் உள்ளது. அந்த உணர்வை முதல் பாடலிலேயே வெளிப்படுத்த விரும்பினோம். ஸ்ரீ ராமரை நாம் வழிபடும் தெய்வமாக மட்டுமல்லாமல், நமக்குள் இருக்கும் பாதுகாவலர், வழிகாட்டி மற்றும் வலிமையின் ஆதாரமாக கொண்டாட வேண்டும் என்பதே எங்களது நோக்கம்,” எனத் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறுகையில், “‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ஸ்ரீ ராமரின் திருநாமத்தை எளிமையாகவும் வலிமையாகவும் மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பக்தி உணர்வு மாறாமல், கேட்பவர்களின் மனதில் நீண்ட காலம் ஒலிக்கும் பிரார்த்தனையாகவும், அதே நேரத்தில் திரைப்படத்தின் ஓர் அங்கமாகவும் இந்தப் பாடல் இருக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இந்தப் பாடல் ரசிகர்களுக்கு அமைதியையும் ஆன்மீக உணர்வையும் வழங்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.
நட்சத்திர பட்டாளத்துடன் ‘ராமாயணம்’
நிதேஷ் திவாரி இயக்கும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ஸ்ரீ ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் நடிக்கின்றனர்.
பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ், எட்டு முறை அகாடமி விருது வென்ற VFX நிறுவனமான DNEG உடன் இணைந்து இப்படத்தை உருவாக்குகிறது. யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும் இப்படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளது. இந்தியாவைத் தவிர உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை சோனி பிக்சர்ஸ் மேற்கொள்கிறது.
5,000 ஆண்டுகள் பழமையான இதிகாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. ‘ராமாயணம் – பாகம் 1’ வரும் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
பிரம்மாண்டமான காட்சியமைப்பு, சர்வதேச தரத்திலான VFX தொழில்நுட்பம், முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பு மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை என பல்வேறு அம்சங்களுடன் உருவாகி வரும் ‘ராமாயணம்’, இந்திய இதிகாசக் கதையை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் தயாராகி வருகிறது. ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியீட்டின் மூலம் இப்படத்தின் இசை உலகிற்கான முதல் கதவு திறக்கப்பட்டுள்ளது.

‘Ramayana’ Begins Its Musical Journey with AR Rahman’s ‘Jai Jai Ram’
Chennai, September 25, 2026:
The much-awaited Ramayana, an ambitious cinematic adaptation of one of India’s most revered epics, has begun its musical journey with the release of its first song, ‘Jai Jai Ram’. Directed by Nitesh Tiwari, the film is being mounted on a grand scale with a stellar ensemble cast.
Composed by AR Rahman, ‘Jai Jai Ram’ features vocals by Chinmayi Sripada and Haricharan, with lyrics penned by Karthik Netha. The song celebrates Lord Rama and blends devotional spirituality with the grandeur of cinematic music.
Reflecting on Lord Rama’s compassion, protection, righteousness and unwavering values, the lyrics repeatedly invoke his divine name, creating a deeply devotional atmosphere. The musical arrangement carries the spiritual essence of an aarti while also introducing audiences to the cinematic world of Ramayana.
Filmmaker and producer Namit Malhotra said, “For generations, Lord Rama has guided us through every stage of life. In moments of darkness, confusion and uncertainty, we look to his path. In moments of happiness, we remember him with gratitude. ‘Jai Jai Ram’ comes from that deep and enduring connection we share with Lord Rama.
“While Ramayana is being created on a massive scale, its true foundation lies in its emotions, values and devotion. We wanted the first song to reflect that devotion. Our intention is to celebrate Lord Rama not only as someone we worship, but also as the protector, guide and source of strength within us.”
Speaking about the song, AR Rahman said, “‘Jai Jai Ram’ is about invoking Lord Rama’s name in a simple yet powerful manner. Our intention was to preserve its devotional essence while creating a prayer that stays with listeners and, at the same time, works beautifully as a cinematic song. I hope the song brings a sense of peace and spirituality to audiences.”
A Stellar Cast Brings the Epic to Life
Directed by Nitesh Tiwari, Ramayana features Ranbir Kapoor as Lord Rama, Sai Pallavi as Sita, Yash as Ravana, Sunny Deol as Hanuman and Ravi Dubey as Lakshmana.
The film is being produced by Prime Focus Studios, founded by Namit Malhotra, in collaboration with eight-time Academy Award-winning visual effects company DNEG, along with Yash’s Monster Mind Creations.
Sony Pictures will distribute the film worldwide outside India.
Based on the timeless epic that has been passed down for thousands of years, Ramayana is being planned as a two-part cinematic spectacle. ‘Ramayana: Part 1’ is scheduled to release in theatres during the Diwali festive season this year.
With its large-scale production, international-standard visual effects, celebrated cast and AR Rahman’s music, Ramayana aims to present the epic to audiences across the world. With the release of ‘Jai Jai Ram’, the film has now opened the first chapter of its musical journey.