‘ராமாயணம்’ இசைப் பயணம் தொடங்கியது – ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியீடு!
‘ராமாயணம்’ இசைப் பயணம் தொடங்கியது – ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியீடு!
சென்னை, செப்டம்பர் 25, 2026:
இந்தியாவின் பழம்பெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை பிரம்மாண்டமான திரை அனுபவமாக உருவாக்கி வரும் திரைப்படம் ‘ராமாயணம்’. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் இசைப் பயணம், முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ வெளியீட்டின் மூலம் தொடங்கியுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் பாடியுள்ளனர். பாடல் வரிகளை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். ஸ்ரீ ராமரின் திருநாமத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘ஜெய் ஜெய் ராம்’, பக்தி உணர்வையும் திரையிசையின் பிரம்மாண்டத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஸ்ரீ ராமரின் கருணை, பாதுகாப்பு, தர்மம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை மையமாகக் கொண்ட பாடல் வரிகள், அவரது திருநாமத...


