
சமீபகாலமாக தமிழ் சினிமாவுக்கு மிக சிறந்த புது முக இயக்குனர்கள் வரவு இருந்து கொண்டே இருகிறார்கள். என்று தான் சொல்லணும் அந்த வகையில் இந்தவாரமும் ஒரு சிறந்த வரவு விஜய் டிவி நடிகர்கள் மட்டும் தான் கொடுக்கும் என்று சொல்ல கூடாது இயக்குனர்களும் அதுவும் சிறந்த இயக்குனர்கள் கொடுப்பார்கள் என்று நிருபித்த படம் என்றும் சொல்லலாம். ஆம் ரங்கூன் படம் ராஜ்குமார் பெரியசாமி அறிமுக இயக்குனராக களம் இறங்கியுள்ளார். விஜய் டிவி பெயரை காப்பற்றியுள்ளார் என்றும் சொல்லலாம்
வித்தியாசமான களம் பழகிய கதை புதுமையான திரைகதை இதன் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஏ.ஆர் முருகதாஸ் உதவி இயக்குனர் என்பதையும் நிருபித்துள்ளார். நிச்சயம் ரங்கூன் போய்வரலாம்.
இந்த படத்தில் கௌதம் கார்த்திக் அறிமுக நாயாகியாக சனா மக்புல், சித்திக், மற்றும் பலர் நடிப்பில் அனிஷ் தருண் குமார் ஓளிப்பதிவுவில் விஷால் சந்திரசேகர் இசையில் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் இணைந்து தயாரித்து இருக்கும் படம் தான் ரங்கூன் சரி இந்த படத்தின் கதைகளம் பார்ப்போம்
பர்மாவின் ரங்கூனில் வசித்து வரும் நாயகன் கவுதம் கார்த்திக், தனது நண்பர்கள் இரண்டு பேருடன் இந்தியாவுக்கு வருகிறார். சென்னை வரும் அவருக்கு, நண்பர் ஒருவர் மூலம் அடகு கடை நடத்திவரும் சித்திக்கின் அறிமுகம் கிடைக்க, அவருடைய கடையில் எடுபிடி வேலைக்கு சேர்கிறார்கள் மூவரும். நாளடைவில் கவுதமின் வேலை சித்திக்கு பிடித்துப் போகிறது. அதேநேரத்தில், ஒரு பிரச்சினையில் சித்திக்கின் மகளை கவுதம் காப்பாற்றுகிறார். அதேபோல், சித்திக்கின் உயிருக்கும் ஆபத்து வரும்போது அவரையும் கவுதம் காப்பாற்றுகிறார். இதனால், கவுதம் மீது சித்திக் வைத்திருந்த பாசம் மேலும் அதிகமாகிறது.
அந்த வேளையில் நாயகி சானா மாக்பல்லை பார்க்கும் கவுதமுக்கு அவள்மீது காதல் துளிர்விடுகிறது. ஆரம்பத்தில் கவுதமை கண்டுகொள்ளாத சானா, பின்னர் அவர் செய்யும் நல்ல விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, காதலிக்கத் தொடங்குகிறார். இந்நிலையில், தனக்கு பணக்கஷ்டம் இருப்பதால் தங்க கடத்தல் வேலையை செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கவுதமிடம் சித்திக் ஆலோசனை கூறுகிறார். கவுதமும் சித்திக்கின் ஆலோசனையை ஏற்று தங்க கடத்தல் வேலையை தொடங்குகிறார்.
ஆரம்பத்தில் சிறிது சிறிதாக தங்க கடத்தல் வேலைகளை செய்துவருகிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களுடைய கடத்தல் தொழிலுக்கு போலீஸால் இடைஞ்சல் வரவே, பெரிய கடத்தல் ஒன்றை செய்துவிட்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட முடிவு செய்கிறார்கள். அதன்படி, நிறைய தங்கத்தை எடுத்துக் கொண்டு பர்மா புறப்படுகிறார்கள். பர்மாவில் அந்த தங்கத்தை கைமாற்றிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பும் வேளையில் இவர்களது பணம் காணாமல் போகிறது.
பணம் காணாமல் போனதால் அனைவரும் செய்வதறியாது திகைக்கிறார்கள். அந்த பணம் எங்கே போனது? கடைசியில் அவர்களுக்கு அந்த பணம் கிடைத்ததா? பணத்தை திருடியவர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
புலிக்கு பிறந்தது பூனையாகது என்று சொல்லுவார்கள் இதுவரை அதை நிரூபிக்காத கௌதம் கார்த்திக் இந்த படம் மூலம் தன தந்தை கார்த்திக் பெயரை காப்பற்றியுள்ளார். என்று சொல்லலாம், கவுதம் கார்த்திக்கு ஏற்ற கதாபாத்திரம் என்பதால் நடிப்பில் தனது திறமையை நிரூபித்து காட்டியிருக்கிறார். அதேபோல், லோக்கல் பாஷை, அழுக்கு படிந்த முகம் என குப்பத்து இளைஞனாக மனதில் பதிகிறார். கவுதமின் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் அவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
நாயகி நாயகி சானா மக்பலுக்கு அறிமுக படமாக இருந்தாலும், தனக்கேற்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு சென்றிருக்கிறார். கதைக்கும் அவருக்கும் பெரிதாக ஒட்டவில்லை நாயகி வேண்டும் என்று திணித்தது போல இருந்தது ஆனால் அவருக்கு கொடுத்த பங்கை சிறப்பாக செய்துள்ளார். ரொமான்ஸ் காட்சிகளில் கூடுதல் அழகாக தெரிகிறார். அடகு கடை அதிபராக நடித்திருக்கும் மலையாள நடிகர் சித்திக், அனுபவ நடிப்பை எதார்த்தமாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்.
அனிஸ் தருண்குமாரின் ஒளிப்பதிவில் ரங்கூனை ரொம்பவும் அழகாக காட்டியிருக்கிறார். இரவிலும், பகலிலும் ரங்கூனின் அழகை நமது கண்களுக்கு விருந்தாக படைத்திருக்கிறார். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு மேலும் மெருகூட்டியிருக்கிறது. விக்ரமின் இசையில் பாடல்களும் கேட்கும்படியாக இருக்கிறது. அன்பறிவு சண்டைக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
மொத்தத்தில் ரங்கூன் சென்று வரலாம் Rank 3/5
