தமிழ் சினிமாவில் எந்த வாரம் இல்லாமல் இந்த வார போட்டி கொஞ்சம் கடுமையாக இருக்கு என்று தான் சொல்லணும் ஆம் மூன்று பெரிய படங்கள் எல்லாமே முக்கியம் வாய்ந்த படங்கள் இதனால் போட்டி கொஞ்சம் கடுமை என்று தான் சொல்லணும் தியேட்டர் முதல் போட்டியில் தான் போய்கொண்டுள்ளது. இந்த மூன்று படங்களும் ஒரு மாதத்துக்கு முன்னாடியே தேதியை அறிவித்து விட்டார்கள் இதனால் தியேட்டர் அதிபர்களும் கொஞ்சம் தடுமாறினார்கள் எந்த படத்தை போடுவது என்று இதில் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்துக்கு மட்டும் அதிக அரங்கம் கிடைத்துள்ளது .325 திரையரங்கமும் அடுத்து றெக்க 300, தேவி 200கும் மேல் தியேட்டர்கள் கிடைத்துள்ளது என்று கூறபடுகிறது .
ஆயுதபூஜையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை அன்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ, விஜய்சேதுபதி நடித்துள்ள றெக்க, பிரபுதேவா, தமன்னா நடித்த டெவில் ஹிந்திப்படத்தின் தமிழ்பதிப்பான தேவி ஆகிய மூன்று படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன.
இந்த மூன்று படங்களில் ரெமோ, றெக்க இரண்டு படங்களுக்குமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்திற்கு அதிகபட்ச எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
காரணம், இந்தப் படத்தில் பெண் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதுதான்.
அதோடு, அனிருத்தின் இசை, பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பது, பிரம்மாண்டமான புரமோஷன் என ‘ரெமோ’ பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட வருகிறது.
இதனால், ‘ரெமோ’ படத்திற்கு மட்டுமே தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் கிட்டத்தட்ட 30% தியேட்டர்கள் புக் பண்ணப்பட்டுள்ளதாக தகவல்.
தமிழகத்தில் மொத்தமுள்ள சுமார் 1050 தியேட்டர்களில் ‘ரெமோ’வுக்காக மட்டுமே 325க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம்.
றெக்க படம்300க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
‘தேவி’ படத்தை நேரடி தமிழ்ப்படம் என்று விளம்பரம் செய்தாலும் தியேட்டர்காரர்களுக்கு அது டப்பிங் படம் என்று தெரியும் என்பதால் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லையாம்.
இதுவரை சுமார் தமிழகத்தில் மட்டும் 200 தியேட்டகளும் இந்தியா முழுக்க கிட்டத்தட்ட 3௦௦௦ காட்சிகளும் பண்ணி உள்ளனர்.இதனால் படத்துக்கு மேலும் அதிக எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது.
மொத்தத்தில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும்