மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இதுவரை (அப்படி தான் சொல்ல வேண்டும்) இந்த வருடம் ஆறு வெற்றி படத்தை கொடுத்தவர் இதனை ரேணிகுண்டா புகழ் பன்னீர்செல்வம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார்
இப்படத்தை அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார்.
முதலில் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது ரித்திகா சிங் இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பார் என கிசுகிசுக்கப்படுகிறது. இதே கூட்டணி ஆண்டவன் கட்டளை படத்திலும் இணைந்து நடித்தது குறுப்பிடத்தக்கது.
இதுவரை சினிமா, குத்துச்சண்டை என பயணித்து வந்த ரித்திகா சிங், இந்த படத்துக்காக குத்துச்சண்டையை ஒரேடியாக கைவிட முடிவு செய்துள்ளாராம். மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார்.