
தனுஷ் நடிப்பில் முதன் முதலாக இரட்டை வேட கெட்டப்பில் அரசியல் கொடியோடு புரட்சி காட்ட தமிழ் சினிமாவில் இந்த தீபாவளிக்கு களத்தில் குதித்து உள்ளார்
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது படம் கொடி நிச்சய வெற்றி அதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வெற்றி எவ்வளவு பெரிய வெற்றி என்பதே தற்போதைய கேள்வி? மிக பெரிய! அலப்பறிய! வெற்றியை அடைய தனுஷ் பாலிவுட்டில் கற்று தேர்ந்த வித்தையை கொடி படத்திற்கு கையில் எடுத்து உள்ளார்.
படத்தின் விளம்பரத்திற்கு தனுஷ் மற்றும் த்ரிஷா இருவரும் பல ஊர்களுக்கு சென்று இரசிகர்களை நேரில் கண்டு அவர்கள் மனதில் கொடி படத்தின் வெடியை வெடிக்க விட்டு திரையரங்கம் இரசிகர்கள் கூட்டத்தில் மத்தாப்பை ஜொலிக்க திட்டம் போட்டு களத்தில் உள்ளனர்
போத குறைக்கும் கொடி படத்தின் பாடல் ட்ரைலர் டீசர் என எல்லாம் ஹிட்டு சந்தோஷ் நாராயணன் இசையில் விவேக் வரிகளில் கொடி பாடல்கள் ஆளை இழுக்கிறது சுழலி சுழலி என மனசை சுத்த விடுகிறது சும்மா அஞ்சு பட்டும் நறுக்கு ரகம்
வருகின்ற தீபாவளிக்கு கொடி வெடி சர வெடி..,
வேட்ட போட்டு கொளுத்துங்கடா!! கொடியா வெற்றி கம்பத்தில் பறக்க விடுங்கடா!!