Wednesday, February 8
Shadow

போதையில் இருக்க தான் ஆசை – ரித்திகா சிங்

ஒரே படத்தில் ஒ ஓஹ் என்று வாழ்கை என்றால் அது நம்ம ரித்திகா சிங்குக்கு தான் பொருத்தம் ஆம் இறுதிச்சுற்று சுற்று படம் மூலம் தமிழ் மட்டும் இல்லை இந்திய சினிமாவை தன் பக்கம் திரும்ப செய்த பெருமை இவருக்கு என்று சொல்லலாம் காரணம் அவரின் எதார்த்த நடிப்பு அனைவரையும் கவர்ந்தது அதே போல் இவர்அ நடித்த ஆண்டவன்கட்டளை இரண்டாவது படமும் இவரின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது அந்த அளவுக்கு யதர்த்த நடிப்பை வெளிபடுத்தியவர். இவருக்கு ஒருக்கும் ஆசை என்ன தெரியுமா

இறுதிசுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தவர் ரித்திகா சிங். நிஜ குத்து சண்டை வீராங்கனையான இவர், படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் ஜோடியாக சிவலிங்கா படத்தில் நடிக்கிறார். அடுத்தடுத்து நடிக்க விரும்பும் கதாபாத்திரங்கள் பற்றி ரித்திகா சிங் கூறியது: சிவலிங்கா நான் நடிக்கும் திகில் படம். லாரன்ஸ் ஹீரோ மட்டுமல்ல சிறந்த டான்ஸ் மாஸ்டர். அவருடன் நடனம் ஆடுவது சவாலாக இருந்தது. விழுந்து எழுந்து அடிபட்டு நடனம் ஆடிவிட்டேன். இதில் என்னை நடனத்திலும் சிறப்பாக பார்க்கலாம்.

அடுத்து வணங்காமுடி படத்தில் அரவிந்த்சாமியுடன் நடிக்கிறேன். இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. எனக்கு இந்தி நன்றாக தெரியும். இன்னும் சொல்லப்போனால் இந்தியில் பேசி நடிப்பது எனக்கு எளிது. அதற்காக தேடி வரும் எல்லா வேடங்களையும் ஏற்க மாட்டேன், நல்ல வேடங்களை தேர்வு செய்தே நடிப்பேன். இன்னமும் மார்ஷல் சண்டை பயிற்சி செய்து வருகிறீர்களா என்கிறார்கள்.

அந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வருகிறேன். அதனால் என்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடிகிறது. நடிப்புக்குத்தான் இனி முக்கியத்துவம் தர உள்ளேன். வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்க விரும்பும் அதேநேரத்தில் குடிகார கதாபாத்திரம், போதை மருந்துக்கு அடிமையான கதாபாத்திரம் போன்றவற்றிலும் நடிக்க விரும்புகிறேன். இதுபோன்ற பழக்கம் எனக்கு கிடையாது. ஆனால் அந்த பாத்திரங்களில் நடிப்பது காமெடியாக இருக்கும். இவ்வாறு ரித்திகா சிங் கூறினார்.

Leave a Reply