Saturday, December 10
Shadow

விஜய்யா இப்படி செய்தார் என்று பலர் ஆச்சரியம் படும் விஷயம் என்ன தெரியுமா ?

சமீபகாலமாக விஜய் யாருக்கும் தெரியாமல் நிறைய நல்ல காரியங்கள் செய்து வருகிறார். என்று தான் சொல்லணும் இது ஒரு குறிப்பிட்ட ஒரு சிலருக்கு என்று இல்லாமல் தன் ரசிகர்மன்றத்தில் உள்ள ரசிகர்களுக்கு என்று முதலில் ஆரம்பிட்ட விஜய் படிப்படியாக பத்திரிக்கையாளர்கள் பொது மக்கள் இப்படி எல்லோருக்கும் யாருக்கும் தெரியாமல் சத்தம் போடாமல் செய்து வருகிறார். இப்ப ஒரு படி மேல போய் உதவி செய்ய ஆரம்பித்துள்ளார் .

பூ கொடுத்த மரத்தின்… வேர் நனைக்க நினைப்பதே நல்லது! இப்படியொரு எண்ணத்தை தன் மனதில் ஆழமாக பதிந்துவிட்டார் போலிருக்கிறது விஜய். கடந்த சில படங்களாகவே திடீரென ஒரு முடிவெடுத்து அதை தில்லாக செய்து வருகிறார் அவர். இப்படியொரு செயலை வேறெந்த நடிகர்களும் செய்வதில்லை என்பதுதான் விசேஷம்.

தனது படம் திரைக்கு வரும் போதெல்லாம் தான் வாங்கும் சம்பளத்திலிருந்து பத்து லட்சம் ரூபாயை சினிமாவின் முக்கிய சங்கங்களுக்கு நன்கொடையாக வழங்க முடிவெடுத்திருக்கிறார். முதன் முதலில் அதை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தொடங்கிய விஜய், அதற்கப்புறம் இயக்குனர் சங்கத்திற்கு நிதி கொடுத்திருக்கிறார். தெறி பட சம்பளத்திலிருந்து ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கு பெரும் தொகை ஒன்றை கொடுத்தவர், தற்போது பைரவா படத்தின் சம்பளத்திலிருந்து பத்து லட்சத்தை எடுத்து எடிட்டர் அசோசியேஷனுக்கு வழங்கியிருக்கிறார்.

சங்கங்கள் பாராட்டுகின்றன. மக்கள் பாராட்டுவது எப்போ என்று காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். ஏதாவது மன கணக்கு தனிக்கணக்கு இருக்கும்…

Leave a Reply