
இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் மிக பெரிய வெற்றி படம் என்றால் அது களவாணி திரைப்படம் இந்த படத்தின் மூலம் தான் ஓவியா விமல் நம் திரைக்கு மட்டும் இல்லை நமக்கும் அறிமுகம் இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கியம் காமெடி தான் சூரி மற்றும் கஞ்சா கறுப்பு காமெடி பெருமளவில் ரசிகர்களிடம் வரவேற்ப்பு பெற்றது தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடித்து வரும் ‘களவாணி-2’ படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. ‘களவாணி-2’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 22-ஆம் தேதி முடிவடைகிறது.
திட்டமிட்ட தேதிக்குள் படத்தை முடித்தாக வேண்டும் என்பதற்காக இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ‘களவாணி’ படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் ‘களவாணி-2’ படத்திலும் நடிக்கிறார்கள்.
களவாணியில் காமெடியனாக நடித்த சூரி ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்திருந்தார். கடைசிநேரத்தில் சம்பளம் மற்றும் கால்ஷீட் பிரச்னை காரணமாக ‘களவாணி-2’வில் சூரி நடிக்கவில்லை.
சூரி நடிக்கவில்லை என்றதும் அவருக்கு பதிலாக விமலின் நண்பராக ஆர்.ஜே.விக்னேஷ் நடிக்கிறார். சற்குணம் அழைத்ததும் மறுபேச்சு பேசாமல் தஞ்சாவூருக்கு கிளம்பிவந்து களவாணி-2 படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம் ஆர்.ஜே.விக்னேஷ். இந்தப்படம் அவருக்கு பெரிய பிரேக்கைக் கொடுக்கும் என்கிறார் சற்குணம்.
