Wednesday, April 30
Shadow

100 கோடி ரசிகர்களின் உள்ளத்தை தொட்ட தனுஷின் ரௌடி பேபி பாடல்


தமிழ் சினிமாவில் தொடர்ந்து சாதனை புரிபவர் என்றால் அது தனுஷ் என்று சொன்னால் மிகையாகது ஆம் பல துறைகளில் இவரின் படங்கள் சாதித்து வருபவது நாம் அறிந்த விஷயம் உலக அளவில் இவரின் பாடல்கள் ரசிகர்களை கவர்வது வாடிக்கையாகிவிட்டது. ஆம் முதலில் வொய் திஸ் கொலை வெறி பாடல் உலககெங்கும் ஒலித்தது பின்னர் இவரின் ரௌடி பேபி பாடல் உலகம் முழுதும் ஒலித்தது அதோடு மிக பெரிய சாதனையும் நிகழ்த்தியுள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டு வெளிவந்த படம் ‘மாரி 2’. இப்படத்தில் தனுஷ் எழுதி தீ-யுடன் இணைந்து பாடிய ‘ரௌடி பேபி’ பாடல் வெளிவந்த நாளிலிருந்தே சூப்பர் ஹிட் ஆகியது. மேலும், பாடலில் இடம் பெற்ற நடனமும், அதில் தனுஷ், சாய் பல்லவியின் நடன அசைவுகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அதனால், யு-டியுபில் இப்பாடலின் வீடியோவை வெளியிட்டதிலிருந்து சாதனை மேல் சாதனையை படைத்து வந்தது. அதற்கு முன்பு தமிழ் சினிமாவில் அதிகப் பார்வைகளைப் பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறியது.

கடந்த 23 மாதங்களாக இப்பாடலை ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் இன்னமும் பார்த்து வருகிறார்கள். இப்போது 1 பில்லியன், அதாவது 100 கோடி பார்வைகள் சாதனையைப் படைத்துள்ளது.

தென்னிந்தியத் திரையுலகத்தில் ஒரு சினிமா பாடல் 1 பில்லியன் சாதனையைப் படைப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு ஓரிரு ஹிந்திப் பாடல்கள் மட்டுமே 1 பில்லியன் சாதனையைப் படைத்துள்ளது.

இந்திய அளவில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடல் என்ற வரிசையில் ‘ரௌடி பேபி’ 5வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 1.3 பில்லியன் பார்வைகளுடன் ‘ஹனுமான் சாலிசா’ என்ற பக்திப் பாடல் உள்ளது. இரண்டாவது இடத்தில் பஞ்சாபி சினிமா பாடலான ‘லாங் லாச்சி’ டைட்டில் பாடலான ‘லாங் லாச்சி’ பாடல் 1.2 பில்லியனுடன் உள்ளது. இந்தப் பாடல்களையும் விரைவில் பின்னுக்குத் தள்ளி ‘ரௌடி பேபி’ முதலிடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.