
160 நாட்களைக் கடந்து நிறைவடைந்த ‘சம்பராலா ஏட்டி கட்டு’ படப்பிடிப்பு! ஜனவரி 12, 2027-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது!
சாய் துர்கா தேஜின் திரைப்பயணத்தில் பிரம்மாண்டமான படமாக உருவாகும் ‘SYG’ – சங்கராந்தி கொண்டாட்டத்திற்குத் தயாராகும் படக்குழு!
மெகா சூப்ப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிப்பில், இயக்குநர் ரோஹித் கே.பி. இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பான் இந்தியத் திரைப்படமான ‘சம்பராலா ஏட்டி கட்டு’ (Sambarala Yeti Gattu – SYG) படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 160 நாட்களுக்கும் மேலாக, 10-க்கும் மேற்பட்ட படப்பிடிப்பு கட்டங்களாகத் தீவிரமாக நடைபெற்ற பணிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படம், 2027 ஜனவரி 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
‘ஹனுமேன்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். நிறுவனத்தின் இதுவரையிலான மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி வரும் ‘சம்பராலா ஏட்டி கட்டு’, சாய் துர்கா தேஜின் திரைப்பயணத்திலும் முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு, படத்தின் உருவாக்கப் பணிகள், அதிரடியான சண்டைக் காட்சிகள் மற்றும் படக்குழுவினரிடையே நிலவிய நெருக்கமான உறவைப் பதிவு செய்யும் வகையில் பிரத்யேக மேக்கிங் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்த மகிழ்ச்சியில், நடிகர் சாய் துர்கா தேஜ் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். இதையடுத்து, படப்பிடிப்புத் தளத்தில் அனைவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவியும், தண்ணீர் மற்றும் படத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட போலி ரத்தத்தைத் தெளித்தும் உற்சாகமாகக் கொண்டாடினர்.
சங்கராந்தி கொண்டாட்டமாக வெளியாகும் ‘SYG’!
2027-ம் ஆண்டின் சங்கராந்தி பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் நோக்கில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனைப் படக்குழுவினர் ‘சம்பராலா சங்கராந்தி’ எனக் குறிப்பிட்டு வருகின்றனர். பிரம்மாண்டமான காட்சியமைப்பு, அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சாய் துர்கா தேஜின் புதிய திரைத் தோற்றம் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
பான் இந்திய அளவில் உருவாகும் இப்படத்தில், பாலிவுட்டைச் சேர்ந்த முன்னணி நடிகர் ஒருவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கன்னட நடிகர் தனஞ்செயா முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா லட்சுமி, ஜெகபதி பாபு, நரேஷ், சாய் குமார், ஸ்ரீகாந்த் மேகா, அனன்யா நாகள்ளா மற்றும் ரவி கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.
அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் குழு!
படத்தின் பிரம்மாண்டமான உருவாக்கத்துக்குப் பக்கபலமாக அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவை வெற்றி பழனிசாமி கவனிக்க, இசையமைப்பை பி. அஜனீஷ் லோக்நாத் மேற்கொண்டுள்ளார். நவீன் வி. கிருஷ்ணா படத்தொகுப்புப் பணியையும், காந்தி நதிக்குடிகர் தயாரிப்பு வடிவமைப்புப் பணியையும் கவனித்துள்ளனர். ஆடை வடிவமைப்பை ஆயிஷா மரியம் மேற்கொண்டுள்ளார்.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டப் பணிகளைத் தொடங்கப் படக்குழு தயாராகி வருகிறது. பிரம்மாண்டமான தயாரிப்பு, நட்சத்திரப் பட்டாளம் மற்றும் பண்டிகைக் கால வெளியீடு எனப் பல அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘சம்பராலா ஏட்டி கட்டு’, 2027 சங்கராந்தி வெளியீடுகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படக்குழு விவரம்
நடிகர்கள்: சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லட்சுமி, தனஞ்செயா, ஜெகபதி பாபு, நரேஷ், சாய் குமார், ஸ்ரீகாந்த் மேகா, அனன்யா நாகள்ளா, ரவி கிருஷ்ணா.
எழுத்து மற்றும் இயக்கம்: ரோஹித் கே.பி.
தயாரிப்பாளர்கள்: கே. நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி
தயாரிப்பு நிறுவனம்: பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்
ஒளிப்பதிவு: வெற்றி பழனிசாமி
இசை: பி. அஜனீஷ் லோக்நாத்
படத்தொகுப்பு: நவீன் வி. கிருஷ்ணா
தயாரிப்பு வடிவமைப்பு: காந்தி நதிக்குடிகர்
ஆடை வடிவமைப்பு: ஆயிஷா மரியம்
மக்கள் தொடர்பு: யுவராஜ்
மார்க்கெட்டிங்: ஹேஷ்டேக் மீடியா
உலகளாவிய திரையரங்கு வெளியீடு: ஜனவரி 12, 2027
மேக்கிங் வீடியோ:
Sai Durgha Tej’s Ambitious Pan-India Film ‘Sambarala Yeti Gattu’ Wraps Up Shooting After 160+ Days; Set for Worldwide Release on January 12, 2027
The Rohith KP directorial promises a grand Sankranthi celebration, with a massive scale, high-octane action, and an ensemble cast.
The much-awaited Pan-India film Sambarala Yeti Gattu (SYG), starring Mega Supreme Hero Sai Durgha Tej and directed by Rohith KP, has successfully wrapped up its shooting after more than 160 days of intensive filming. Produced by K. Niranjan Reddy and Chaitanya Reddy under the banner of Primeshow Entertainment, the film is scheduled for a grand worldwide theatrical release on January 12, 2027.
Primeshow Entertainment, the production house behind the blockbuster HanuMan, is mounting Sambarala Yeti Gattu as its most ambitious project to date. The film is also being positioned as one of the biggest projects in Sai Durgha Tej’s career, raising expectations among fans and audiences across the country.
The makers marked the completion of filming by releasing a special behind-the-scenes video showcasing the film’s grand production scale, intense action sequences, and the strong camaraderie shared by the cast and crew throughout the shooting journey.
The film was shot over 160 days across more than 10 extensive schedules, reflecting the scale and ambition of the project. Following the completion of filming, Sai Durgha Tej expressed his heartfelt gratitude to the entire team. The occasion soon turned into a celebration, with the cast and crew cheering, embracing one another, and playfully splashing water and artificial blood to mark the milestone.
‘Sambarala Yeti Gattu’ Set for a Grand Sankranthi Release
The makers are promoting the film as Sambarala Sankranthi, promising audiences a grand cinematic experience at the beginning of 2027. With its ambitious production, action-packed sequences, and Sai Durgha Tej’s much-anticipated screen presence, the film is expected to be one of the notable theatrical releases of the Sankranthi festive season.
The film features a strong ensemble cast, with a prominent Bollywood actor playing a key role. Kannada actor Dhananjaya essays a pivotal character, while Aishwarya Lekshmi, Jagapathi Babu, Naresh, Sai Kumar, Srikanth Meka, Ananya Nagalla, and Ravi Krishna are also part of the cast.
Experienced Technical Team on Board
Adding to the film’s scale is an experienced technical crew. Vetri Palanisamy is handling the cinematography, while B. Ajaneesh Loknath is composing the music. Nawin V. Krishna is in charge of editing, and Gandhi Nadikudikar oversees production design. Ayesha Mariam is handling costume design.
With filming now complete, the team is preparing to move into the next phase of production ahead of the film’s theatrical release.
Scheduled to arrive in cinemas worldwide on January 12, 2027, Sambarala Yeti Gattu is gearing up to make a mark during the Sankranthi festive season. Its grand scale, extensive shooting schedule, ensemble cast, and Sai Durgha Tej’s next big-screen outing have made it one of the anticipated films of early 2027.
Film Credits
Cast: Sai Durgha Tej, Aishwarya Lekshmi, Dhananjaya, Jagapathi Babu, Naresh, Sai Kumar, Srikanth Meka, Ananya Nagalla, and Ravi Krishna.
Writer and Director: Rohith KP
Producers: K. Niranjan Reddy and Chaitanya Reddy
Production Banner: Primeshow Entertainment
Cinematography: Vetri Palanisamy
Music: B. Ajaneesh Loknath
Editor: Nawin V. Krishna
Production Designer: Gandhi Nadikudikar
Costume Designer: Ayesha Mariam
Public Relations: Yuvraaj
Marketing: Haashtag Media
Worldwide Theatrical Release: January 12, 2027
Watch the Making Video:
