
தமிழ் சினிமாவில் மோதல் என்பது இன்று ஏற்பட்ட விஷயம் இல்லை என்று தான் சொல்லணும் அது எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி காலத்தில் ஏற்பட்டது பின்னர் ரஜினி மற்றும் கமல் அடுத்து அஜித், விஜய், சிம்பு மற்றும் தனுஷ் இன்று விஜய் சேதுபதி மற்றும் சிவகர்த்திகேயன் மோதல் அதிகமாக போகிவிட்டது அதாவது அவர்கள் மோதவில்லை அவர்களின் ரசிகர்கள் மோதல் தான் இந்த மோதல்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மோகன் ராஜா இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், படத்தின் பின்னணி வேலைகள் முடியாததால் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், அன்றைய தினத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கருப்பன்’ வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார். பன்னீர் செல்வம் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே செப்டம்பர் 29ம் தேதி, ஜி.வி.பிரகாஷின் ‘செம’, நயன்தாராவின் ‘அறம்’, கௌதம் கார்த்திக்கின் ‘ஹர ஹர மகாதேவகி’, சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது.
