Wednesday, May 6
Shadow

சென்னையில் ஒரு மதுரை சண்டைகோழி 2 படத்துக்கு செட் போடுகிறார் விஷால்

சண்டகோழி தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம் என்று தான் சொல்லவேண்டும் இந்த படம் தான் விஷாலுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நிறந்திர இடத்தையும் நட்சத்திர அந்தஸ்தை கொடுத்த படம் என்றும் சொல்லாம் அதே போல் இயக்குனர் லிங்குசாமிக்கும் இது ஒரு முக்கியமான படம் என்று சொல்லணும் காரணம் இந்த படம் இவருக்கு கமர்சியல் இயக்குனர் பட்டம் வாங்கி கொடுத்த படம் அதும் மட்டும் இல்லாமல் இந்த படம் மிக பெரிய வெற்றிப்படம் அதோடு வசூலில் மிக பெரிய சாதனை புரிந்த படம் என்றும் சொல்லணும்,

இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்று சில வருடங்கள் முன்னே சொன்னார் இயக்குனர் லிங்குசாமி ஆனால் விஷாலுக்கும் இவருக்கும் இருந்த கருத்துவேறுபாடல் தள்ளி சென்றது பிறகு மீண்டும் இருவரும் இணைகிறோம் என்ற அறிவிப்பு வந்து இப்போது இந்தப்படத்தின் பூஜை இன்று வெகு விமர்சியாக சென்னை பின்னி மில்யில் நடைபெற்றது .

விஷால் பிலிம் பாக்டரி (VFF) தயாரிப்பில் புரட்சி தளபதி விஷால் அவர்கள் நடிக்க இருக்கும் 25-வது படம் சண்டைகோழி -2.

அப்படத்தின் பிரம்மாண்டமான செட் சென்னை பின்னிமில்லில் 10எக்கர் நிலபரப்பில் 500கடைகள்,
கோவில் திருவிழா கொண்டாட்டம் தொடங்கஅழகான மதுரையை 6- கோடி செலவில் வடிவமைப்பதில் இறங்கி உள்ளனர்கள்.
அதற்கான பூஜை இன்று காலை பின்னிமில்லில் விஷால் பிலிம் பாக்டரி (VFF) இணை தயாரிப்பாளர் திரு.M.S.முருகராஜ்,இயக்குனர் திரு.N.லிங்குசாமி மற்றும் கலை இயக்குனர் ராஜீவ்வன் அவர்கள் தொடங்கி வைத்தனர்கள்.

Leave a Reply