
மகாபிரபு, ஏய், சாணக்யா, சண்டமாருதம்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய சரத்குமார் – இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மீண்டும் ‘பாம்பன்’ என்ற படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இதில் சரத்குமார் வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும், முதல் பாடல் பதிவு தற்போது தொடங்கி இருப்பதாகவும் சரத்குமார் அறிவித்திருக்கிறார்.
எஸ்.எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.கே.சங்கரலிங்கம் தயாரிக்கவுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். விரைவில் இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
