Monday, December 9
Shadow

விஜயின் சர்கார் வியாபாரத்தில் புதிய சாதனை தென்னக சினிமா ஆச்சர்யம்!

தீபாவளியன்று (நவம்பர் 6) வெளியாவதற்கு தயாராகி வருகிறது ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்த தயாராகி வருகிறது. ஒவ்வொரு படத்தின் வெளியீட்டிற்கு முன்பும் வியாபாரம் நடக்கும். இதில் புதியதொரு சாதனையை படைத்திருக்கிறார் விஜய்.

இப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. தேனாண்டாள் நிறுவனத்திடமிருந்து சேலம் உரிமையை 7ஜி சிவா, கோயம்புத்தூர் உரிமையை கந்தசாமி ஆர்ட்ஸ், திருச்சி – தஞ்சாவூர் உரிமையை எல்.ஏ சினிமாஸ், மதுரை உரிமையை ப்ரவீன் மற்றும் சென்னை உரிமையை அபிராமி ராமநாதன் ஆகியோர் கைப்பற்றி இருக்கிறார்கள்.

இவர்கள் கொடுத்திருக்கும் தொகை என்பது ஒவ்வொரு ஏரியாவுக்கும் விஜய்யின் முந்தைய படங்களின் தொகையை விட அதிகம். விநியோக உரிமை, இசை உரிமை, உலகளாவிய வெளியீட்டு உரிமை என்று அனைத்தையும் சேர்த்தால் சுமார் 200 கோடியைத் தாண்டும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.
செங்கோல்’ கதையும், ‘சர்கார்’ கதையும் ஒன்று தான் என்ற சர்ச்சைத் தொடர்பாக, இன்று (நவம்,27) பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அப்போது இந்த வியாபாரம் தொடர்பாகவும் கேட்ட போது, “அனைவருமே சொல்கிறார்கள். ஆனால், வியாபார கணக்கிற்குள் எப்போதுமே போக விரும்பமாட்டேன்” என்று தெரிவித்தார்.

பட வெளியீட்டிற்கு முன்பே 200 கோடி வியாபாரம் என்றால், கிட்டதட்ட ‘பாகுபலி 2’ அளவுக்கு வியாபாரம் நடைபெற்றிருக்கிறது. அப்படியென்றால், ‘பாகுபலி 2’ அளவுக்கு ‘சர்கார்’ திரையரங்கில் ஓட வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே, போட்ட பணத்தை திரும்ப எடுக்க முடியும்.

’சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு, கதை சர்ச்சை என தொடர்ச்சியாக ஒருவித எதிர்பார்ப்பை இப்படம் உருவாக்கிக் கொண்டே இருப்பதால், கண்டிப்பாக போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என்று நம்புகிறார்கள் விநியோகஸ்தர்கள்.