விஜயின் சர்கார் வியாபாரத்தில் புதிய சாதனை தென்னக சினிமா ஆச்சர்யம்!
தீபாவளியன்று (நவம்பர் 6) வெளியாவதற்கு தயாராகி வருகிறது ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்த தயாராகி வருகிறது. ஒவ்வொரு படத்தின் வெளியீட்டிற்கு முன்பும் வியாபாரம் நடக்கும். இதில் புதியதொரு சாதனையை படைத்திருக்கிறார் விஜய்.
இப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. தேனாண்டாள் நிறுவனத்திடமிருந்து சேலம் உரிமையை 7ஜி சிவா, கோயம்புத்தூர் உரிமையை கந்தசாமி ஆர்ட்ஸ், திருச்சி - தஞ்சாவூர் உரிமையை எல்.ஏ சினிமாஸ், மதுரை உரிமையை ப்ரவீன் மற்றும் சென்னை உரிமையை அபிராமி ராமநாதன் ஆகியோர் கைப்பற்றி இருக்கிறார்கள்.
இவர்கள் கொடுத்திருக்கும் தொகை என்பது ஒவ்வொரு ஏரியாவுக்கும் விஜய்யின் முந்தைய படங்களின் தொகையை விட அதிகம். விநியோக உரிமை, இசை உரிமை, உலகளாவிய வெளியீட்டு உரிமை என்று அனைத்தையும் சேர்த்தால் சுமார் 200 கோடியைத் தாண்டும் என்று விநியோகஸ்தர...



