
பொன்ராம் – சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், சமந்தா மற்றும் சூரியுடன் படத்தின் டப்பிங் பணிகள் முடிவுக்கு வந்ததாக இயக்குநர் பொன்ராம் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். படத்தில் மிரட்டும் வில்லியாக சிம்ரனும், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகவும் ராசியான மாதம் செப்டம்பர் அதோடு சிவகார்த்திகேயனுக்கும் ராசியான மாதம் காரணம் ஏற்கனவே இவரிகளின் கூட்டணி இரண்டு படங்களும் செப்டம்பர்வெளியானது என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்
