
பொன்ராம் இயக்கத்தில் சிவகர்த்திகேயன் இணைந்தாலே அது வெற்றி படம் என்பது தமிழ் சினிமாவின் லாஜிக் அதோடு வசூல் மழை விநியோகிஸ்தர்களுக்கு கொட்டும் அதை இந்த படம் பூர்த்தி செய்யுமா மீண்டும் ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா என்று பல கேள்விகள் இருந்தன இதற்க்கு முற்று புள்ளி வைக்க இன்று முடிவு வந்து விட்டது
மீண்டும் இந்த கூட்டணியின் மாபெரும் வெற்றி படம் நிச்சயம் இந்த படமுமும் வசூல் மழை உண்டு என்று நிருபித்துள்ளார் இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கூட்டனி மீண்டும் ஒரு வெற்றி என்று சொன்னால் மிகையாகது ஹாட்ரிக் அடித்த இந்த கூட்டணியை பாராட்டனும்
ராஜவம்சத்தை சேர்ந்த சீமராஜா தனது ராஜ கௌரவத்தை மீட்டெடுக்க முயல்வது தான் ’சீமராஜா’ படத்தின் கரு.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களுக்கு பிற்கு சிவகார்த்திகேயன், சூரி மற்றும் இயக்குநர் பொன்ராம் கூட்டணியில் வெளிவந்துள்ள மூன்றாவது படம் ’சீமராஜா’.
வழக்கம் போல நகைச்சுவை காட்சிகள் மிகவும் தரமாக தயாராகியுள்ளது. டீச்சராக வரும் சமந்தாவின் கதாபாத்திரம் மிகவும் ரசிக்கும்படியான இருக்கும் நிலையில், சிம்ரனின் கதாபாத்திரம் தெறிக்க விடுகிறது.
மலையாள சினிமாவின் புகழ்பெற்ற நடிகர் லால் இருந்தபோதிலும், ’சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயன் – சிம்ரன் காம்போ தான் பிரதானம். இதற்கிடையில் சூரி அடிக்கும் லூட்டிகளும் ரசிக்க வைக்கின்றன.
பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் இதுவரை வெளிவந்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’ரஜினிமுருகன்’ படங்கள் வரிசையில் ‘சீமராஜா’வும்இணையும் என எதிர்பார்க்கலாம்.
சதீஷ் காமெடியை விட சிவகார்த்திகேயனுக்கு சூரியின் டைமிங் காமெடி தான் அதிகளவில் கைகொடுத்துள்ளது. இவர்கள் கூட்டணியில், மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது. இந்த படங்கள் அனைத்திலும், காமெடிக்கும், வசூலுக்கும் பஞ்சமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டணியில் வந்த படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு, பாடலுக்கும் பஞ்சமில்லை. இந்தக் கூட்டணியில், மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் வந்துள்ளது.
இந்தப் படங்கள் அனைத்திலும் பாடல்கள் மாஸ் ஹிட் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் வந்துள்ள சீமராஜா படத்திற்கும் இமான் தான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் மாஸ் ஹிட் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்ததில் சீமராஜா நம் மனதை கொள்ளைகொல்கிறார் தமிழ் சினிமாவின் மாஹா ராஜா Rank 4/5
