Sunday, April 19
Shadow

உடல் தானம் செய்த பத்திரிக்கையாளரும் நடிகரும் ஆன தேவராஜ்

தமிழ் சினிமா பத்திரிக்கையாளர்களில் ஒருவர் தேவராஜ் இவர் கடந்த 27 வருடங்களாக சினிமா பத்திரிக்கையாளராக பணிபுரிந்து வருகிறார். குடியாத்தம் ஊரில் பிறந்த தேவராஜ் தன் பள்ளி படிப்பை முடித்தவுடன் சினிமாவில் நடிக்கவும் பாடல் எழுதவும் சென்னை வந்தார் அவரை பிரபல நடிகர் தேங்காய் ஸ்ரீநிவாசன் சென்னை அழைத்து வந்தார். தேங்காய் சீனிவாசன் தயாரித்து நடித்த கண்ணன் வருவான் படத்தில் பாடல் எழுத வந்த தேவராஜ் கடைசியில் அவரால் பத்திரிக்கையாளராக தான் ஆகா முடிந்தது அதுவும் ரே நாளிதழில் கிட்டத்தட்ட 27 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு இன்று முத்த பழய மூத்த நடிகர்களும் மிக பெரிய பழக்கம் உள்ளவர் தேவராஜ் என்றால் எல்லோருக்கும் தனி அன்பும் மரியாதையும் உண்டு காரணம் அவர் யார் மனதையும் புண் படும் படி எழுத மாட்டார் அதோடு எல்லோரிடமும் உரிமையுடன் பழக கூடியவர் தேவராஜ் என்றால் தெரியாத நடிகரும் இல்லை என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு புகழ்வாய்ந்தவர்

கடந்த சில நாளுக்கு முன் ஒரு மருத்துவமனைக்கு எதோ வேலையாக செல்லும் போது மருத்துவ கல்லூரி மாணவர்கள் பேசிய சில விஷயங்கள் இவர் காதில் விழ அது என்னவென்றால் ஒரு மாணவி தன் பயிற்சியின் பொது சக மாணவியிடம் உடல் கிடைக்காததால் தான் நாம் இந்த சிலிகான் பொம்மைகளை வைத்து பயிற்சி செய்கிறோம் என்று பேசியதை கேட்ட தேவராஜ் அங்கு தான் தன உடல் தானம் செய்யவேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது து மட்டும் இல்லை எப்போதும் அடுத்தவர்கள் கொடுத்தார்கள் என்று நாம் எழுதுகிறோம் அவர் ஏன் செய்யவில்லை என்று கேள்வி கேட்கிறோம் ஆனால் நாம் ஏன் இதை செய்யவில்லை என்ற எண்ணமும் மனதில் ஓடிகொண்டே இருந்தது இதவே தான் இவருக்கு உடல் தானம் பண்ணவேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது

தேவராஜ் தன மனைவியிடம் தன் விருபத்தை சொல்ல உடனே அவர் மனைவி சரி என்று சந்தோசமாக சொல்ல இருப்பினும் அவர் தன மகள் மற்றும் மகனிடமும் கேட்டு அவர்கள் சம்மதத்தோடு தன் உடல் தானத்தை செய்துள்ளார். உடனே தன் உடல் தானம் விஷயமாக சென்னை மருத்துவ கல்லூரியில் சென்று அது சமந்த பட்ட அதிகாரிகளிடம் சொல்ல அவர்கள் கொஞ்சம் தடுமாறியுள்ளனர். பின்னர் எப்படி உங்களுக்கு இந்த எண்ணம் வந்தது என்று கேட்க அப்போது தன் அனுபவத்தை சொல்ல உடனே அவர்களும் சரி என்று அதற்கான விண்ணப்பங்கள் கொடுத்து முறைப்படி எழுதி வாங்கி கொண்டனர்.

சென்னையில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் மேல் வாழும் மக்கள் இடையே இவரின் விண்ணப்ப எண் வெறும் ஆயிரத்து மேல் தானாம் இதை பற்றி இன்னும் பலர் தெரியாமல் இருப்பது இதற்கான விழிப்புணர்வும் இல்லை என்பதும் தேவராஜின் வருத்தம் ஆனால் தேவராஜ்க்கு ஒரு சந்தோசம் தன் விவரம் கேட்டு அறிந்த நடிகர் பிளாக் பாண்டி அவரும் உடல் தானம் செய்ய முன் வந்துள்ளாராம்.

உடல் தானம் முறை படி செய்த தேவாராஜ் விஷயம் கேட்டு அறிந்த உலக நாயகன் கமல்ஹாசன் உடனே அவரை அழைத்து மற்றும் அவர் குடும்பத்தாரையும் அழைத்து பேசியுள்ளார் .

நடிகரும் பத்திரிகையாளருமான ‘கயல்’ தேவராஜ் தனது 50 வது பிறந்த நாளையொட்டி உடல் தானம் செய்துள்ளார். அவருக்கு நடிகர் கமல்ஹாஸன் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக உடல் தானம் செய்தவர் நடிகர் கமல்ஹாசன். தன்னைப் போலவே கண் தானம் மற்றும் உடல் தானம் செய்பவர்களை வாழ்த்தியும், ஊக்குவித்தும் வருகிறார்.

நடிகரும் மூத்த பத்திரிகையாளருமான ‘கயல்’ தேவராஜ் தனது 50 வது பிறந்தநாளை முன்னிட்டு உடல் தானம் செய்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் அமீர் நடிப்பில் வெளியான ‘யோகி’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று (ஜூன் 18) தனது 50 வது பிறந்தநாள் கொண்டாடும் தேவராஜ், தனது உடல் மற்றும் கண்களை தானம் செய்துள்ளார்.

Leave a Reply