Monday, July 6
Shadow

சில்லுக்கருப்பட்டி- திரைவிமர்சனம் (பொக்கிஷம்)Rank 4.5/5

 

கருப்பட்டி என்றாலே நாவில் எச்சில் ஊறும் சின்ன சின்ன எச்சில் வரும் கருப்பட்டி உடலுக்கு நல்லது அதிலும் சுக்கு மஞ்சள் காப்பி போட்டு குடித்தால் ஆனந்தம் இதை பலர் அனுபவித்து இருக்க மாட்டார்கள் .

அந்த கருப்பட்டி பேரில் ஒரு படம் அதை வெளியிடுவது நடிகர் சூர்யாவின் திரைப்பட நிறுவனம் அப்பா நிச்சயம் படம் நல்லா தான் இருக்கம் என்ற நம்பிக்கை அதோடு மேலும் நம்பிக்கை சமுத்திரகனி போன்ற சிறந்த நட்சதிரங்கள் நடிக்கும் படம் ஆகவே கூடுதல் ஒரு ஆர்வத்தில் அரங்கத்துக்குள் நுழைந்த நமக்கு எப்படி ஒரு அனுபவம் கிடைக்குமோ என்ற ஏக்கம்.

அந்த ஏக்கத்துக்கு ஒரு அருமையான விருந்து கருபட்டியை சுவைக்கும் உணர்வைவிட ஒரு உன்னத உணர்வு இந்த படத்தில்கவித்துவமான  நான்கு கதைகளை ஒரு படமாக தொகுத்து வழங்கியது மேலும் பாரட்ட வேண்டிய விஷயம். இன்றைய நடப்பை மிகவும் யதார்த்தமாக கொடுத்து இருகிறார் இயக்குனர் ஹலீதா ஷமீம்

குப்பை மேட்டில் வாழ்ந்தாலும் நேர்மைதான் முக்கியம் என்று வாழும் சிறுவன் வறுமையின் உச்சத்தில் இருக்கும் அவன்  குப்பை பொறுக்கும் போது கிடைக்கும் மோதிரம் அந்த மோதிரத்தை உரியவரிடம் கொடுக்க வேண்டும் என்று அந்த சிறுவன் படம் பாடு ஒரு கதை தான் ஒன்று

இரண்டாவது எபிசோடில், கட்டி, கேன்சராகலாம் என்றதும் முழுவதுமாக உடைந்து போகும் மணிகண்டன், இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவருடன் காரை ஷேர் பண்ணும் நிவேதிதா சுரேஷ் அத்தனை அழகு. மனக்கஷ்டத்தில் இருக்கிறார் என்பதைத் புரிந்துகொண்டு, அவராகப் பேச்சுக்கொடுத்து, வாழ்க்கை வெறுத்துப் போனவனின் வாழ்வைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்பதும் அதற்கான உரையாடலும் சுகமான ரசனை.

வயதானவர்களின் பிரச்னையை காதலோடு சொன்ன விதத்தில் மூன்றாவது எபிசோடும் சுவாரஸ்யம்தான். தனிமையில் அவதிபடும் லீலா சாம்சன், அவருக்கு ஆதரவு கரம் கொடுக்கும் ஶ்ரீராம் இருவரும் ரசிக்க வைக்கிறார்கள்.

கடற்கரை காதலர்கள் தமை மறந்து கிஸ் பண்ணிக்கொள்வதை சுட்டிக்காட்டி நாமும் அந்த மாதிரியா என நவநீதன் கேட்க முகம் சுளிக்கிற யசோதா வெறுத்து ஒதுங்கினாலும் அன்புக்காக ஏங்குகிறது மனம். அற்புதமான கேரக்டர்கள். சூப்பர் !

நடிப்பில் நின்று ஆடுவது கடைசி எபிசோட் சுனேனாவும் சமுத்திரக்கனியுமே. மெஷின்போல மூன்று குழந்தைகளைப் பெற்றுவிட்டாலும் அன்புக்கு ஏங்கும் சுனேனா, தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் கணவனுக்கு வகுப்பெடுக்கும் ஆவேசம், தன் உணர்வுகளையும் ஆசைகளையும் புரிய வைக்கும் லாவகம் என இதில் வேறொரு முகம் காட்டுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக மனைவியின் உலகமறிந்து மாறும் கணவர் சமுத்திரக்கனி, கச்சிதம்.

இந்த நான்கு கதைகளை கனகசிதமாக மிக சிறந்த திரைகதை மூலம் நம்மை ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர். குழந்தை நட்சத்திரமாக பார்த்த சாரா இந்த படத்தில் பெரிய மனுசியாக வளம் வருகிறார் நம்மை கவரவும் செய்கிறார்.

 

வயதான ஜோடியாக வரும் லீலா சாம்சன் மற்றும் கிரவ்மாக ஸ்ரீதரன் நடிப்பில் நம்மை கவருகிறார்கள் இவர்கள் நடித்தார்களா இல்லை அந்த வாழ்கையை வாழ்ந்தார்களா என்று யோசிக்கவைக்கும் நடிப்பு படத்துக்கு மிக பெரிய பலம்

சமுத்திரகனி சுனைனா படத்துக்கு மிக பெரிய பலம் கடைசியாக வரும் எபிசோடு படத்தின் முக்கிய கட்டம் என்பதால் கதையும் கதபாத்திறத்தை உணர்ந்து நடித்து இருகிறார்கள். படத்தின் நான்கு எபிசோடுக்கு பெரிய பாலமாகவும் பலமாகவும் இவர்கள் நடிப்பு பிரமிக்க வைக்கிறது.

பெண் இயக்குனர் ஹலீதா ஷமீம்தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகபெரிய பொக்கிஷம் என்று தான் சொல்லணும் அப்படியான ஒரு கதைகள் நட்சத்திர தேர்வுகள் திரைகதை காட்சிக்கு காட்சி மிகவும் தன் ரசனை முலம் உணர்வுப்பூர்வமாக இயக்கியுள்ளார்.

குடும்பத்தோடு படம் பார்க்கமுடியவில்லை என்ற ஏக்கத்தை முற்றிலும் மாற்றி குடும்பத்தோடு பார்த்து காதலின் மகிமையை உணரும் ஒரு படமாக அமைத்துள்ளது.

மொத்தத்தில் சில்லுக்கருப்பட்டி அற்புத உணர்வுகள் Rank 4.5/5