
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஓவியா, இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ்வை ஒரு தலையாக காதலித்தார்.
ஆரவ் காதலை நிராகரித்து விட்டதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார், அப்போது சிம்பு ஓவியாவுக்கு ஆதரவாகவும் அவரை திருமணம் செய்து ஆசைப்படுவதாகவும் ஒரு ட்வீட் செய்தார், பின்னர் சில நிமிடங்களில் அதை நீக்கினார்.

பின்னர் நியூ இயர் ஸ்பெஷலாக சிம்பு இசையில் ஓவியா பாடிய ஆல்பம் பாடல் ஒன்று வெளியாகி வைரலானது, இதனையடுத்து தற்போது சிம்பு மற்றும் ஓவியாவுக்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதாக புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆனால் இது எடிட்டிங் செய்யப்பட்ட புகைப்படம் என்பதால் இது வெறும் வதந்தி தான் என்பது தெளிவாகி உள்ளது, ஓவியா ஆர்மியை சேர்ந்தவர்கள் ஓவியாவின் பெயரை கெடுக்கவே இப்படி யாரோ வேண்டாதவர்கள் செய்த வேலை தான் இது என கூறி வருகின்றனர்.
