Tuesday, February 11
Shadow

தனுஷ்வுடன் போட்டிக்கு தயாரான சிவகார்த்திகேயன்

24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள படம் சீமராஜா. ஏற்கனவே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்த பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணி மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளதால் சீமராஜா படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வரும் செப்டம்பர் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று சீமராஜா ரிலீசாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. காரணம், தமிழ் திரைப்பட வெளியீட்டை முறைப்படுத்தும் நோக்கில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, ஒரு படம் தணிக்கை சான்றிதழ் வாங்கிய பிறகு, அதனை வெளியிட மூன்று தேதிகளுடன் தயாரிப்பாளர் சங்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனை ஆய்வு செய்யும் வெளியீட்டு வரன்முறை குழு, திரைப்படம் வெளியிடப்படும் தேதிக்கான ஒப்புதல் கடிதத்தை அளிக்கும்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட படக்குழு வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால் சீமராஜா படக்குழு இந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல், தன்னிச்சையாக வரும் செப்டம்பர் 13ஆம் படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளது. முன்னதாக தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளை மீறி தனது படமான ‘இரும்புத்திரை’ அறிவிப்பை விஷால் வாபஸ் பெற வைத்தது நினைவு கூரத்தக்கது. மேலும், வரும் விநாயகர் சதுர்த்தி அன்று தனுஷின் வடசென்னை படமும் ரிலீசாக இருக்கிறது. இதனால், சீமராஜா விசயத்தில் விஷால் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

தனுஷின் வட சென்னை படம் வெளியாகிறது என்று தெரிந்தும் அதே தேதியை ஏன் இந்த படக்குழு அறிவிக்கவேண்டும் அப்போ தனுஷ்வுடன் போட்டி போட சிவகார்த்திகேயன் தயாகிறார என்று கோலிவுட்யில் கிசுகிசுக்க படுகிறது