தனுஷ்வுடன் போட்டிக்கு தயாரான சிவகார்த்திகேயன்
24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள படம் சீமராஜா. ஏற்கனவே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்த பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணி மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளதால் சீமராஜா படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வரும் செப்டம்பர் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று சீமராஜா ரிலீசாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. காரணம், தமிழ் திரைப்பட வெளியீட்டை முறைப்படுத்தும் நோக்கில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, ஒரு படம் தணிக்கை சான்றிதழ் வாங்கிய பிறகு, அதனை வெளியிட மூன்று தேதிகளுடன் தயாரிப்பாளர் சங்கத்தில்...