Sunday, April 19
Shadow

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் ‘ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய விமர்சனம்

மோகன் ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் நயன்தாரா, பஹத் பாசில், ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகிணி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

2016-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. சென்னையில் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படம் செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘வேலைக்காரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் மோகன் ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இன்று தமிழ் சினமாவின் அதிகம் கவனம் யார் பக்கம் என்றால் அது நம்ம சிவகார்த்திகேயன் தான் காரணம் அவரின் வளர்ச்சி தான் முக்கிய காரணம் என்று சொல்லணும் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் மிக பெரிய இடத்தை பிடித்த ஒரே நடிகர் என்ற பெருமை அவருக்கு தான் உண்டு என்று ஆணித்தரமாக சொல்லலாம் காரணம் வர்த்தக ரீதியாக எந்த ஒரு நடிகன் வெற்றி பெறுகிறானோ அவன்தான் முக்கிய நடிகர் மட்டும் இல்லாமல் முன்னனி நடிகர் அந்தஸ்தையும் பெறுகிறான் அந்த வகையில் சிவகார்த்திகேயன் அதை தொடர்ந்து செய்துவருகிறார் என்று சொன்னால் அது மிகையாகது

சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் வழியை அதிகம் பின்பற்றுகிறார் என்று சொல்லலாம் காமெடி அவருடன் பிறந்த ஒன்று அதை மிகவும் அழகா பயன்படுத்தி இன்று குட்டிஸ் மத்தியிலும் இளைஞர் மத்தியிலும் மற்றும் பெண்கள் இவருக்கு அதிக ரசிகர்களாக இருப்பது தான் பெரியபலம் என்று சொல்லணும் சிவகார்த்திகேயன் படத்துக்கு தான் குடும்பம் குடும்பமாக திரையரங்குக்கு வருகிறார்கள். என்பதின் ரகசியம் ஏன் அவரின் வெற்றியின் ரகசியம் என்று கூட சொல்லலாம்.

ரெமோ படத்துக்கு பிறகு இவரின் ரசிகர் பட்டாளம் அதிகமாகிவிட்டது. இதனால் இவரின் வேலைக்காரன் படத்துக்கு மிக பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர் இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதும் இந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகிவிட்டது என்று தான் சொல்லணும்.இந்த போஸ்டர் படத்தை பற்றி நிறைய விஷயங்கள் சொல்லுகிறது அதிலும் வேலைக்காரன் டைட்டில் தொழிலாளர்கள் சின்னத்தை மையபடுத்திதான் டிஸைன் செய்துள்ளார் என்று தோனவைக்கிறது. அதேபோல சிவகார்த்திகேயன் பின்னாடி ஒரு குப்பம் மறு பக்கம் தொழில் கிடங்கு போல டிசைன் பண்ணியுள்ளார் அதோடு மருத்துவ கழிவுகள் அதிகம் காண்பித்துள்ளனர்.

இதன் மூலம் தொழிலார்கள் மற்றும் மருத்துவம் சமந்தமான கதையாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Leave a Reply