தமிழ் சினிமாவில் இன்று அனைவராலும் மிகவும் கவனத்துக்கு உரிய நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயந்தான் தொடர்ந்து படங்கள் அதுவும் அனைத்தும் மிகவும் முக்கிய இயக்குனர்கள் மற்றும்தயாரிப்பு நிறுவனங்களுடன் தான் ஒபந்தம் கிட்டத்தட்ட கைவசம் நான்கு படங்கள் அதில் ஒரு படம் சன் பிக்சர்ஸ் இவரின் 15வது படம் கொட்டபாடி ராஜேஷ் தயாரிக்கிறார் இந்த படத்துக்கு விஷாலை வைத்து மிக பெரிய வெற்றி படம் இரும்பு திரை படத்தி இயக்கிய மித்திரன் தான் படத்தில் இயக்குனர்.

இரும்புத்திரை படம் புகழ் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. அந்த படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது.

சிவகார்த்திகேயன், மித்ரன் இணையும் படத்திற்கு ஹீரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி இந்த படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.

ஹீரோ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் தலைப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. ஆனால் ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்திற்கும் ஹீரோ என்று பெயர் வைத்துள்ளனர்.

Related