
சிவகார்த்திகேயன் மற்றும் சந்தானம் இருவருமே விஜய் டிவி நகைசுவை தொகுப்பாளர்கள் தான் இந்த இருவரும் சிந்தனை திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்கள் இருவரும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் யார் வம்பு தும்புக்கும் போகாதவர் தன விடாமுயற்சி மற்றும் உழைப்பால் தன்னை ஒரு முன்னணி ஹீரோவாக நிலைநிறுத்தி கொண்டார் அதே போல நகைசுவை நடிகராக வளம் வந்த சந்தானம் தற்போது தன்னை ஹீரோவாக உயர்திக்கொண்டார் தற்போது இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் சக்கைபோடு ராஜ இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்த போது சந்தானம் பேசிய சில குறிப்புகள்
‘சக்க போடு போடு ராஜா’ படத்துக்கு சிம்பு இசையமைத்ததைப் பற்றிக் கேட்டபோது, “ஈனி எத்தனைப் படங்களுக்கு அவர் இசையமைத்தாலும் முதல்படம் என்னுடையதுதான் என்ற பெயரைப் பெற்றது பெருமை…” என்ற சந்தானம், “அஜித், விஜய் படங்களுக்கு உண்டான பிரமாண்ட இசையைத் தந்திருகிறார் சிம்பு..!” என்றார்.
“நடிக்கும் படங்களுக்கே ஒழுங்காகக் தேதிகள் கொடுக்காத சிம்புவை எப்படி நம்பி இசையமைப்பாளர் ஆக்கினீர்கள்..?” என்ற கேள்விக்கு பதிலளித்த விடிவி கணேஷ், “சிம்பு சும்மா இருக்கும் நேரங்களில் எல்லாம் ஏதாவது பாடலை இசைத்துக்கொண்டேதான் இருப்பார். இசையில் அவருக்கு அவ்வளவு ஈடுபாடு உண்டு. எங்களுக்கான பாடல்களை ஒரே மாதத்தில்… அதுவும் லைவ் இசைக்கருவிகளை வைத்து ரிகார்ட் செய்து கொடுத்து விட்டார்..!” என்றார்.
தன் படங்களிலேயே இந்தப் படம்தான் 200 சதவிகித கமர்ஷியல் படமாக வந்திருப்பதாகத் தெரிவித்த சந்தானத்திடம், “சிவகார்த்திகேயனின் வேலைக்காரனும், உங்கள் படமும் ஒரே நாளில் வெளியாவதால் அவருக்கு நீங்கள் போட்டியாக இருக்கிறீர்களா..?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சந்தானம், “நடிகர்களுக்குள் பொறாமைதான் இருக்கக் கூடாது. போட்டி இருக்கலாம். இரண்டு படங்களும் விடுமுறை தினங்களில் வெளியாவது ரசிகர்களுக்கு நல்லதுதான். ஆனால், இந்தப் போட்டி எங்கள் படங்களுக்குள்தானே தவிர, எங்களுக்குள் இல்லை..!” என்றார்.
படங்கள் ரிலீசாகும் டிசம்பர் 22-ம்தேதிக்கு மேல் இருக்குது கச்சேரி..!
