கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தை ரத்தினசிவா இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இன்று அதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்து இதில் விஜய்சேதுபதி சதீஷ் ஹாரிஸ் கல்யான் தயாரிப்பாளர் கணேஷ் எடிட்டர் பிரவீன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினார்கள் இதில் பேசிய விஜய் சேதுபதி ‘றெக்க’ என் வாழ் நாளின் கனவு படம் என்று தான் சொல்லணும் எல்லோருக்கும் ஒரு கனவுக்கு இருக்கும் அதுபோல தான் இந்த படம் எனக்கும் எல்லா ஹீரோக்கும் இப்படி ஒரு படம் பண்ணனும் என்ற ஆசை இருக்கும் அது தான் இந்த படம் என்று கூறினார்.
பொதுவாக ஒரு நடிகர் இன்னொரு நடிகரை பாராட்ட மாட்டார்கள் ஆனால் அதில் வித்தியாசமானவர் தான் விஜய் சேதுபதி காரணம் நட்புக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர் இந்த விழாவில் ஹரீஸ் கல்யான் நடிப்பை அப்படி மனம் திறந்து பாராட்டினார் அது மட்டும் இல்லாமல் அவருக்கு ஹீரோவுக்கான எல்லா துகுதிகளும் இருக்கு எனக்கு நேரம் வரும் போது அவரை வைத்து படம் எடுப்பேன் என்றும் கூறினார் அதே போல் இயக்குனர் ரதினசிவாவையும் மிகவும் பாராட்டினார் .தமிழில் மிகபெரிய இயக்குனராக ஏன் மாஸ் இயக்குனராக வருவார் என்றும் கூறினார்.
சிவகார்த்திகேயனுக்கும் உங்களுக்கும் இந்த 7ம் தேதி நேரடி மோதலா என்று கேட்டதுக்கு இல்லை நிச்சயம் இல்லை அவர் படம் வேறு அவர் ரெமோ படத்துக்காக மிகவும் உழைத்துள்ளார் அது மட்டும் இல்லாமல் மிகுந்த பொருள் செலவில் படம் எடுத்துள்ளார் ட்ரைலர் பார்த்து நானே வியந்து உள்ளேன் அந்த படம் நிச்சயம் ஜெயிக்கும் அதே போல் என் படமும் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருக்கு என் படமும் நல்ல வந்து இருக்கு ரசிகர்களுக்கு எந்த படம் பிடிக்குதோ அந்த படம் ஓடும் என்றார். நான் ஜெயித்தால் என்ன என் நண்பன் ஜெயித்தால் என்ன என்று மிகவும் பெருமையாக கூறினார் இந்த மனபக்குவம் யாருக்கு வரும் .