Monday, February 16
Shadow

கோவிலாக வாழ்ந்த தன் வீட்டை அகரம் பௌண்டேஷன்க்கு கொடுத்தார் சிவகுமார்

சிவகுமார் தமிழ் சினிமாவில் நடமாடும் பல்கலைகழகம் என்று தான் சொல்லவேண்டும், ஏழை விவசாயிக்கு கோவை மாவட்டத்தில் பிறந்தவர் தான் சிவகுமார் கோவையில் அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் பிறந்து தன் விடாமுயற்சி மற்றும் உழைப்பால் ஒரு ஓவியர் பின்னர் நடிகர் என்று வளர்ந்தவர். ஒரு நடிகனாக இருந்தாலும் தன் தந்தை தாயின் பாரம்பரியத்தோடு வாழ்ந்தவர் ஒழுக்கம் என்றால் அது சிவகுமார் என்று எல்லோரும் சொல்லுவார்கள். தமிழ் சினிமாவில் தன் ஐம்பது வருட சினிமா வாழ்கையில் எந்த ஒரு தவறும் சுட்டி காட்டமுடியாத ஒரு நடிகர் என்றால் அது சிவகுமார் தான் என்று ஆணித்தரமாக சொல்லலாம். தான் மட்டும் இல்லை தன் பிள்ளைகளையும் அப்படி தான் வளர்த்தார்.

தன் கைக்குள் வைத்து தன் பிள்ளைகள் கார்த்தி சூர்யா மற்றும் மகள்பிருந்தா இந்த மூவரையும் வளர்த்தார் மிக சிறந்த முறையில் படிக்க வைத்தார். தான் படிக்கும் பொது பல இன்னல்களை சந்தித்து தான் படித்தோம் அதனால் தன் சமூகமும் தன் சமுகத்தை சார்ந்தவர்களும் படிப்புக்கு கஷ்டபடகுடாது என்று 25 ஆண்டுகளுக்கு முன் அகரம் என்று ஏழை பள்ளி மாணவர்கள் படிப்புக்கு உதவி செய்ய ஒரு குழு வைத்து அவர்கள் தேர்ந்தடுக்கும் மாணவர்களுக்கு படிப்பு செலவுக்கு உதவினார்.

தன் அப்பா எப்படியோ அப்படி தன் நாங்கள் என்று சூர்யா மற்றும் கார்த்தி அதே வழியில் இன்னும் பெரிய அளவில் உதவிகளை செய்கிறார்கள். முன்பு ஒரு குறிப்பிட்ட அளவில் செய்து வந்த உதவி இப்ப ஆலமரம் போல வளர்ந்து மிக பெரிய அளவில் செய்து வருகின்றனர் அது தான் அகரம் அந்த அகரம் அலுவலகம் வேண்டும் என்று தன் வீட்டையே சிவகுமார் கொடுத்துள்ளார் .

நடிகர் சிவ குமார் பல ஆண்டுகளாக தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்த சென்னை திநகர் பகுதியில் உள்ள இல்லத்தில் இருந்து தற்போது புதிதாக கட்டியுள்ள “ லக்ஷ்மி இல்லத்திருக்கு “ சென்றுள்ளனர். நடிகர் சிவகுமார் அவர்கள் சென்னைக்கு வந்து முதன் முதலில் வாங்கிய சொத்து இந்த வீடு தான்.

இந்த வீட்டில் தான் சூர்யா , கார்த்தி மற்றும் அவர்களின் தங்கை பிருந்தா ஆகியோர் பிறந்தனர். இந்த வீட்டில் தான் அவர்கள் மூவரின் திருமணமும் நடைபெற்றது. பேரன் , பேத்திகள் பிறந்தது இங்கே தான். இந்த வீடு சிவகுமார் அவர்களுக்கு செண்டிமெண்டாக மனதிருக்கு நெருக்கமான ஒரு வீடு. இந்த வீட்டை விட மனமில்லாவிட்டாலும் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு மகன்கள் கேட்டுகொண்டதால் இந்த வீட்டில் இருந்து சிவகுமார் அவர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் “ லக்ஷ்மி இல்லத்திருக்கு “ சென்றுள்ளனர்.

அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பது சிவகுமார் அவர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் கனவு. தற்போது அந்த வீட்டை அதற்காக துவங்கப்பட்ட “ அகரம் பௌண்டேஷன் “ செயல்பாடிற்கு பயன்படுத்தி வருகிறார்கள் . சிவகுமார் அவர்கள் கோவிலாக நினைத்து வந்த வீட்டை தொண்டு நிறுவனமான அகரம் பௌண்டேஷன் செயல்பாடிற்கு தந்துள்ளது பராட்டுக்குரிய ஒன்றாகும். ஹாட்ஸ் ஆப் சிவகுமார் & பேமிலி

Leave a Reply